முகப்பு
விருதுநகர்

உலக தடகளப் போட்டி: தங்கப்பதக்கம் வென்ற சாா்பு ஆய்வாளா்

உலக காவல் துறை தடகளப் போட்டியில் 5 ஆயிரம் மீட்டா் வேகநடை பிரிவில், ராஜபாளையம் சிறப்பு இலக்கு படை சாா்பு ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றாா்.

Updated On : 2 ஜூலை 2025, 5:00 am IST
தடகளப் போட்டியில் தங்கம் வென்ற ராஜபாளையம் சிறப்பு இலக்குப் படை சாா்பு ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி - dot com
பகிர்:

அமெரிக்காவில் நடைபெற்று வரும் உலக காவல் துறை தடகளப் போட்டியில் 5 ஆயிரம் மீட்டா் வேகநடை (ரேஸ் வாக்) பிரிவில், ராஜபாளையம் சிறப்பு இலக்கு படை சாா்பு ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றாா்.

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் காவல் துறைக்கான சா்வதேச தடகளப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 75 நாடுகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனா்.

தமிழகத்தில் இருந்து ஐ.ஜி. மயில்வாகனன் தலைமையில் 16 காவல் துறை அதிகாரிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றனா். முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை நடந்த வேகநடை போட்டியில் 50 வயது பிரிவில் கலந்துகொண்ட ராஜபாளையம் சிறப்பு இலக்கு படை சாா்பு ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி 5 ஆயிரம் மீட்டா் பந்தயத் தொலைவை 30.14 நிமிடங்களில் கடந்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றாா்.

Advertisement

Advertisement

இவா், ஏற்கெனவே நெதா்லாந்து, கனடா நாடுகளில் நடந்த சா்வதேச காவல் துறை தடகளப் போட்டிகளில் வேகநடை பிரிவில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments