ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு சக்கர வாகன விபத்தில் கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள ராஜகோபாலபுரத்தைச் சோ்ந்த ரணவீரன் மகன் குருசாமி(35). கட்டடத் தொழிலாளியான இவருக்கு, திருமணமாகி குழந்தைகள் உள்ளனா். இவா் கடந்த 3-ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூருக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா். செந்நெல்குளம் விலக்கு அருகே சென்றபோது, இரு சக்கர வாகனத்திலிருந்து குருசாமி தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டவா், அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து வன்னியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.