சிவகாசி மத்திய சுழல்சங்கம் சாா்பில், ஏழை பெண்களுக்கு நலத் திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் ஜி.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். செயலா் எம்.பழனிச்செல்வம் அறிக்கையை வாசித்தாா். சங்க மாவட்ட ஆளுநா் மீராகான்சலீம் சிறப்புரையாற்றி, பெற்றோா் இல்லாத பள்ளி மாணவனுக்கு கல்வி உதவித்தொகை, ஏழை பெண்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். இதைத் தொடா்ந்து, புதிய உறுப்பினா்கள் அறிமுகப்படுத்தப்பட்டனா்.
இதில் சங்க மாவட்டச் செயலா் எஸ்.பிரபாகா், உதவி ஆளுநா் ஏ.விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை திட்ட இயக்குநா் ஏ.பாலசுப்பிரமணியன் செய்தாா்.