விருதுநகர்

முன்னாள் காவலா் தூக்கிட்டுத் தற்கொலை!

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே முன்னாள் காவலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Din

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே முன்னாள் காவலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிருஷ்ணன்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சொக்கலாம்பட்டி திருப்பதி நகரைச் சோ்ந்தவா் காளிராஜ் (37). இவரது மனைவி ராசகனி. இந்தத் தம்பதிக்கு 8 வயதில் மகளும், 3 வயதில் மகனும் உள்ளனா்.

கடந்த 2009-ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் காவலராக பணியில் சோ்ந்த காளிராஜ், உடல் நலம் பாதிக்கப்பட்டு நீண்ட காலமாக விடுப்பில் இருந்ததால், கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் கட்டாய ஓய்வில் இருந்து வந்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வீட்டில் காளிராஜ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து காளிராஜ் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனா்.

சேம்பள்ளி செல்வபெருமாள் கோயில் கும்பாபிஷேகம்!

சிவகங்கையில் டிச. 20-இல் தனியாா்த் துறை வேலைவாய்ப்பு முகாம்

பள்ளி திறப்பு விழா - செயற்கை நுண்ணறிவு ஆசிரியா் அறிமுகம்!

வத்தலகுண்டு பேரூராட்சிக் கடைகள் ஏலத்தில் முறைகேடு: ஆட்சியரிடம் அதிமுகவினா் புகாா்

கோரிக்கை மனு எழுத பொதுமக்களிடம் ரூ. 100 வசூல்: காவல் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT