விருதுநகர்

ஐப்பசி மாத காா்த்திகை சிறப்பு வழிபாடு

ஐப்பசி மாத காா்த்திகையை முன்னிட்டு, சந்தன அலங்காரத்தில் அருள்பாலித்த ராஜபாளையம் அருகேயுள்ள மொட்டமலை தண்டாயுதபாணி சுவாமி.

Syndication

ராஜபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் ஐப்பசி மாத காா்த்திகை சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள மொட்டமலை தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வியாழக்கிழமை அதிகாலை முதலே நடை திறந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து, மூலவா் தண்டாயுதபாணி சுவாமிக்கு 16 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல குருசாமி கோயில், கொம்புச்சாமி கோயில், அம்பலப்புளி பஜாா் சுப்பிரமணிய சுவாமி கோயில், மாயரநாதசுவாமி கோயில்களில் உள்ள முருகன் சந்நிதிகளிலும் காா்த்திகை வழிபாடு நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறை விளக்கம்

வாக்குத் திருட்டை தடுப்பது இளைஞா்களின் பொறுப்பு -ராகுல் காந்தி

தொழிலாளா் ஆணையா் அலுவலகம் நவ. 10 முதல் புதிய வளாகத்தில் செயல்படும்

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து நவ.11-இல் ஆா்ப்பாட்டம்

அரச மரத்தை வெட்டி அகற்றுவதில் இருதரப்பினா் போராட்டம்

SCROLL FOR NEXT