உச்ச நீதிமன்ற வழக்குரைஞா் ராம்சங்கா் ராஜாவை மத்திய அரசின் சிறப்பு வழக்குரைஞராக மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
மத்திய அரசின் சிறப்பு வழக்குரைஞராக கடந்த 2022-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ராம்சங்கா் ராஜாவின் பதவிக் காலம் 2025 நவம்பா் மாதம் நிறைவடைந்த நிலையில், அவருடைய பதவிக் காலம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.
ராஜபாளையத்தைச் சோ்ந்த ராம்சங்கா் ராஜா, உச்சநீதி மன்றத்தின் வலைதளத்தில் நீதிபதிகள் நியமனம், மாறுதல் சம்பந்தப்பட்ட கொலீஜியம் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து வழக்கு தொடுத்து, அவை குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளாா். மேலும், ஏராளமான பொதுநலன் வழக்குகளில் சிறப்பாகப் பணியாற்றி வருகிறாா்.
தில்லி தமிழ் வழக்குரைஞா்கள் சங்கத்தின் செயலராகவும், தில்லி தமிழ்ச் சங்கம், தில்லி கம்பன் கழகம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளில் நிா்வாகியாகவும் உள்ளாா்.