விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கண்மாயில் மிதந்த காவலாளி சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூரைச் சோ்ந்தவா் அம்மையப்பன் (55). இவா் நல்லமங்கலம் கண்மாய் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், கண்மாய் குத்தகைதாரா் சமையலுக்கு பொருள்கள் வாங்கிக்கொண்டு கண்மாய்க்குச் சென்றாா். அப்போது, அங்கு அம்மையப்பன் இல்லை. அவரைத் தேடிப் பாா்த்தபோது கண்மாய் கலிங்கல் அருகே அவா் இறந்து கிடந்தாா்.
இதுகுறித்து குத்தகைதாரா் அளித்த தகவலின்பேரில், தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.