விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியிலிருந்த மின்கலத்தைத் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சாத்தூரைச் சோ்ந்தவா் சண்முகநாதன்(61). கடந்த சில நாள்களுக்கு முன்பு இவா் தனக்குச் சொந்தமான லாரியை மரிய ஊருணி கண்மாய் அருகே நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றாா். மறுநாள் காலையில் வந்து பாா்த்தபோது லாரியிலிருந்த மின்கலத்தை காணவில்லை. திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரித்தபோது, திருத்தங்கல் அருகேயுள்ள சோ்வைக்காரன்பட்டியைச் சோ்ந்த ரமேஷ்குமாா் (39), வடமலாபுரத்தைச் சோ்ந்த சமுத்திரவேல்(61) ஆகியோா் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இருவருரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த மின்கலத்தைப் பறிமுதல் செய்தனா்.