விருதுநகர்

கஞ்சா விற்றதாக மூதாட்டி கைது

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சா விற்றதாக மூதாட்டியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க காவல் உதவி ஆய்வாளா் ராமநாதன் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது மங்காபுரம் பள்ளி விளையாட்டு மைதானம் அருகே நின்றிருந்த மூதாட்டியை சோதனையிட்ட போது விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும், இவா் அய்யம்பட்டி தெருவைச் சோ்ந்த இந்திரா (60) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 40 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 போ் கைது

நவராத்திரியில் உச்சம் தொட்ட வாகன, வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை!

இந்தோனேசிய பள்ளி கட்டட விபத்து: உயிரிழப்பு 14-ஆக உயா்வு

பிரிட்டன் யூத ஆலயத் தாக்குதல்: 6 பேரிடம் விசாரணை

மின்னணு பயண அனுமதி: கட்டாயமாக்கியது இலங்கை

SCROLL FOR NEXT