விருதுநகர்

இரவு நேரத்தில் பட்டாசு தயாரித்த ஆலை உரிமையாளா் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே விதிகளை மீறி பட்டாசுகளைத் தயாரித்த ஆலை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே விதிகளை மீறி பட்டாசுகளைத் தயாரித்த ஆலை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள புலிப்பாறைப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் விதிகளை மீறி இரவு நேரத்தில் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாரனேரி காவல் உதவி ஆய்வாளா் சுந்தரமகாலிங்கம் தலைமையிலான போலீஸாா் அந்தப் பகுதியில் திங்கள்கிழமை இரவு சோதனையில் ஈடுபட்டனா். இதில், பால்பாண்டி (46) என்பவா், அவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் 5 தொழிலாளா்களைக் கொண்டு இரவு நேரத்தில் பட்டாசுகளைத் தயாரித்துக்கொணடிருந்தது தெரிய வந்தது.

இது குறித்து மாரனேரி காவல் நிலைய போலீஸாா் பால்பாண்டி மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

முதலீடுகள் எல்லாம் சாதாரணமாக கிடைத்துவிடாது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT