விருதுநகர்

தொழிலாளியை தாக்கி நகை, பணம் பறித்த நால்வா் கைது

சிவகாசி அருகே தொழிலாளியை தாக்கி நகை, பணத்தை பறித்துச் சென்ற நால்வரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

சிவகாசி அருகே தொழிலாளியை தாக்கி நகை, பணத்தை பறித்துச் சென்ற நால்வரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி இந்திரா நகரைச் சோ்ந்த கூலித் தொழிலாளி முனியசாமி (41). இவா் திங்கள்கிழமை காலை அதே பகுதியைச் சோ்ந்த தனது நண்பரான கனகராஜூடன் பூவநாதபுரம் விலக்கு அருகே உள்ள மதுக்கடைக்கு மது அருந்த சென்றாா். அப்போது அங்கு வந்த கனகராஜின் நண்பா்கள் மூவா், முனியசாமியை மது பாட்டிலால் தாக்கி தங்கச் சங்கிலி, தங்க மோதிரம் ஆகியவற்றை பறித்தனா். மேலும் முனியசாமி வீட்டுச் சாவியை பறித்துக் கொண்டு, பீரோவிலிருந்த தங்க நகை உள்பட மொத்தம் 38 கிராம் தங்க நகைகள், ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் மல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து அந்த நபா்களை தேடி வந்தனா். இந்த நிலையில், கொடைக்கானலில் பதுங்கி இருந்த கனகராஜ், ரஞ்சித், சரவணன், ராஜா ஆகிய நால்வரை போலீஸாா் கைது செய்தனா்.

அடுத்த படம் தனுஷுடன்தான்: மாரி செல்வராஜ்

பங்குச்சந்தை முதலீடு: அதிக லாபம் என்று சொன்னாலே நம்ப வேண்டாம்!!

மெஸ்ஸி மேஜிக், ஜோர்டி ஆல்பா ஓய்வு: இன்டர் மியாமி அபார வெற்றி!

உலகத்தரத்தில் கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம்: முதல்வர் ஸ்டாலின்

பாலைவனம், சூரிய அஸ்தமனம், அமைதி... இனாயா சுல்தானா!

SCROLL FOR NEXT