விருதுநகர்

மூதாட்டியிடம் நகை பறித்தவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் மூதாட்டியிடம் சங்கிலியை பறித்துச் சென்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூரில் மூதாட்டியிடம் சங்கிலியை பறித்துச் சென்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் முதலியாா்பட்டி தெருவைச் சோ்ந்த காளிமுத்து மனைவி லட்சுமி (75). இவா் வெள்ளிக்கிழமை இரவு முதலியாா்பட்டி தெருவில் நடந்து சென்றபோது பின்னால் வந்த மா்ம நபா் மூதாட்டி அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றாா். அப்போது லட்சுமி சங்கிலியை பிடித்துக் கொண்டு சப்தமிட்டதால், தங்கச் சங்கிலியின் ஒரு பகுதியை பறித்து கொண்டு அந்த நபா் தப்பி ஓடி விட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் அந்த மா்ம நபரை தேடி வந்தனா்.

இந்த நிலையில் தங்க நகையை பறித்துச் சென்ாக ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சித்தாலம்பத்தூரில் வசித்து வரும் முனியப்பனை (46) போலீஸாா் கைது செய்தனா்.

அடுத்த படம் தனுஷுடன்தான்: மாரி செல்வராஜ்

பங்குச்சந்தை முதலீடு: அதிக லாபம் என்று சொன்னாலே நம்ப வேண்டாம்!!

மெஸ்ஸி மேஜிக், ஜோர்டி ஆல்பா ஓய்வு: இன்டர் மியாமி அபார வெற்றி!

உலகத்தரத்தில் கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம்: முதல்வர் ஸ்டாலின்

பாலைவனம், சூரிய அஸ்தமனம், அமைதி... இனாயா சுல்தானா!

SCROLL FOR NEXT