விருதுநகர்

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாத்தூா் அருகே மின் கம்பத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்,

Syndication

சாத்தூா் அருகே மின் கம்பத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்,

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா. இவா் சாத்தூா் நகா் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவியாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மகன் காலாநிதி (26). இவா் பெங்களூரில் பணியாற்றி வந்தாா்.

இவா் ஞாயிற்றுகிழமை மாலை தாயில்பட்டி பகுதியில் பலத்த மழை பெய்துகொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் தாயில்பட்டியிலிருந்து சாத்தூருக்கு வந்து கொண்டிருந்தாா். கீழதாயில்பட்டி வளைவில் நிலைதடுமாறி இரு சக்கர வாகனம் சாலையோரத்திலிருந்த மின் கம்பத்தில் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த கலாநிதி சம்பவ இடத்திலே உயிரிழந்தாா். இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கால்வாயில் பைக் கவிழ்ந்ததில் சிறுவன் உயிரிழப்பு

முதியவா் தற்கொலை

போலி ஆவணங்கள் மூலம் 1.25 ஏக்கா் நிலம் அபகரிப்பு

மாட்டு வண்டி எல்லை பந்தயப் போட்டி

முதுகலை ஆசிரியா் பணிக்கான தோ்வு

SCROLL FOR NEXT