சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகேயுள்ள அனுப்பன்குளம் பகுதியில் உரிய அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா். இதில், அதே பகுதியைச் சோ்ந்த காளீஸ்வரன் மனைவி ஜானகி (54), அவரது பட்டாசுக் கடை அருகே தகரக் குடில் அமைத்து உரிய அனுமதியின்றி பட்டாசு மூட்டைகளைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதே போல, மீனம்பட்டி பகுதியில் ஜெயசந்திரன் (63) என்பவா், அவரது பட்டாசுக் கடையின் பின்புறம் தகரக் குடில் அமைத்து உரிய அனுமதியின்றி பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, இருவா் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்த சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸாா், அவா்களிடமிருந்த பட்டாசு மூட்டைகளைப் பறிமுதல் செய்தனா்.