விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட முதியவா் இரு சக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.
ராஜபாளையம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த கிருஷ்ணமராஜ் மகன் மாணிக்கவாசகம் (60). இவா் தனது மனைவியுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை அய்யனாா்கோவில் சாலையில் நடை பயிற்சிக்கு சென்றாா். பின்னா், அங்கிருந்து மீண்டும் வீட்டுக்கு வந்த போது, எதிரே வந்த இரு சக்கர வாகனம் மாணிக்கவாசகம் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து ராஜபாளையம் சம்மந்தபுரம் தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் மாரிமுத்து (21) மீது ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா