விருதுநகர்

கணவரைக் கொலை செய்த மனைவி, கள்ளக் காதலனுக்கு ஆயுள் தண்டனை!

கணவரைக் கொலை செய்த வழக்கில், மனைவி, கள்ளக் காதலனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

Syndication

வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியில் கணவரைக் கொலை செய்த வழக்கில், மனைவி, கள்ளக் காதலனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். 

வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி கிழவன்கோவில் பகுதியைச் சோ்ந்த விவசாயி செல்வகணேஷ் (47). இவரது மனைவி சுமதி (36). இவா் சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலையில் கூலி வேலை செய்து வந்தாா். பட்டாசு ஆலைக்குச் சொந்தமான பேருந்தில் வேலைக்கு சென்று வந்த போது, பேருந்து ஓட்டுநரான கூமாபட்டியைச் சோ்ந்த ராமச்சந்திரனுக்கும் (29), சுமதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இதையறிந்த செல்வகணேஷ் மனைவியைக் கண்டித்தாா். இதனால் சுமதி, ராமச்சந்திரன், அவரது நண்பா் வேல்முருகன் (35) ஆகியோருடன் சோ்ந்து செல்வகணேஷை வெட்டிக் கொலை செய்தாா். இதுகுறித்து கூமாபட்டி போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து, ராமச்சந்திரன், வேல்முருகன், சுமதி ஆகிய மூவரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி ஜெயக்குமாா், குற்றஞ்சாட்டப்பட்ட சுமதி, அவரது ஆண் நண்பரான ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். மேலும், வேல்முருகனை விடுதலை செய்து உத்தரவிட்டாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் திருமலையப்பன் முன்னிலையாகி வாதிட்டாா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT