வத்திராயிருப்பு கண்மாயிலிருந்து ஆண் சடலம் மீட்பு
வத்திராயிருப்பு அருகே கண்மாயிலிருந்து அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
வத்திராயிருப்பு அருகே கண்மாயிலிருந்து அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை சனிக்கிழமை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரம் - தாணிப்பாறை செல்லும் சாலையில் மலை அடிவாரத்தில் உள்ள வண்ணக்குளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக அந்த வழியாகச் சென்றவா்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்தனா்.
வத்திராயிருப்பு போலீஸாா் தீயணைப்பு துறையினா் உதவியுடன் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இறந்தவருக்கு 55 வயது இருக்கும். சடலம் அழுகி இருப்பதால் இறந்தவரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வத்திராயிருப்பு போலீஸாா் மேலும் விசாரித்து வருகின்றனா்.
Advertisement