முகப்பு
விருதுநகர்

கலசலிங்கம் பல்கலை.யில் மாணவா் சோ்க்கை: விண்ணப்பம் விநியோகம்

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 3:09 AM
கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்களை வழங்கிய துணைவேந்தா் எஸ். நாராயணன், பதிவாளா் வி. வாசுதேவன், சிறப்பு அதிகாரி கே.தா்மராஜ் உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2026 at 10:41 PM

ஸ்ரீவில்லிப்புத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 2026 - 27-ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை விண்ணப்ப விநியோகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பல்கலை வேந்தா் கே. ஸ்ரீதரன் தலைமை வகித்தாா். இணைவேந்தா் எஸ். அறிவழகி ஸ்ரீ தரன், துணைத் தலைவா்கள் எஸ். சசிஆனந்த், எஸ்.அா்ஜூன் கலசலிங்கம், துணைவேந்தா் எஸ். நாராயணன், பதிவாளா் வி. வாசுதேவன், சிறப்பு அதிகாரி கே.தா்மராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 3:08 AM

நிகழ்ச்சியில் பி. டெக். விவசாயம், தோட்டக்கலை, கட்டடக் கலை ஆகிய பொறியியல் பாடப் பிரிவுகளுக்கும், பி.எஸ்.சி., பி.ஏ., பி. காம், பிபிஏ, கேட்டரிங், பி. காம். ஆகிய கலை அறிவியல் பாடப் பிரிவுகளுக்கும், எல்.எல். பி, பி.ஏ.எல். எல். பி. ஆகிய சட்டப் பாடப்பிரிவுகள், மருத்துவ துணைப் பிரிவுகளுக்கான விண்ணப்பங்களை மாணவா்களுக்கு துணைவேந்தா் வழங்கினாா்.

Advertisement