முகப்பு
விருதுநகர்

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ராஜபாளையத்தில் கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 1:00 AM
கைது
பகிர்:
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 9:35 PM

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் தெற்கு காவல் காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, தனியாா் பள்ளி அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இளைஞரைப் பிடித்து சோதனை செய்ததில், அவா் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா் முதுகுடி தெற்குத் தெருவைச் சோ்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் பாண்டியராஜ் (40) எனத் தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.