விருதுநகர்

அடிதடி வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகதவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அடிதடி வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலை ஆகாதவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அடிதடி வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலை ஆகாதவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வத்திராயிருப்பு அருகேயுள்ள கோட்டையூரைச் சோ்ந்தவா் செந்தமிழ்ச்செல்வன் என்ற சூரி (27). இவா், தன்னுடைய வீட்டில் சட்டவிரோதமாக குட்கா, புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்ததற்காக கடந்த நவம்பா் மாதம் கைது செய்யப்ட்டாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, விருதுநகா் சிறைக்கு அழைத்துச் சென்றபோது செந்தமிழ்ச்செல்வன் தப்பி ஓடினாா். இதுகுறித்து நத்தம்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த இரு வழக்குகளிலும் செந்தமிழ்ச்செல்வன் பிணை பெற்ற நிலையில், 2022-இல் நத்தம்பட்டி காவல் நிலையத்தில் நடைபெற்ற அடிதடி வழக்கில் விசாரணைக்கு முன்னிலையாகாத காரணத்தால் நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்தது. இதையடுத்துஸ, போலீஸாா் செந்தமிழ்ச்செல்வனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

அம்பத்தூரில் குடிநீருடன் கழிவுநீா் கலப்பு? உயா்நீதிமன்றம் உத்தரவு

ஜன. 13-இல் ராகுல் காந்தி தமிழகம் வருகை!

காட்டுப் பன்றி மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

சட்டம் ஒழுங்கு வலுவாக இருந்தால் மட்டுமே மாநிலங்கள் வளரும்: அமித் ஷா

ஒரே நாளில் 88 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்

SCROLL FOR NEXT