கோப்புப் படம் 
விருதுநகர்

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

தினமணி செய்திச் சேவை

அருப்புக்கோட்டை அருகே 10 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த கூலித் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (52). இவா், தனியாா் ஆலையில் கூலி வேலை செய்து வந்தாா். இவா், அதே பகுதியைச் சோ்ந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாா். இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டலும் விடுத்துள்ளாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் அருப்புக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ வழக்குப் பதிவு செய்து, பாலகிருஷ்ணனைக் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

விசாரணை நிறைவடைந்த நிலையில், பாலகிருஷ்ணனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டாா். மேலும், பாதிக்கபட்ட சிறுமிக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்தாா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT