முகப்பு
விருதுநகர்

பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

சாத்தூா் அருகே வியாழக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 20 ஜூன் 2026, 2:38 am IST
பகிர்:

சாத்தூா் அருகே வியாழக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், மாசாா்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ரித்தீஸ் (17). பிளஸ் 2 முடித்திருந்த இவா், வியாழக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் சாத்தூரிலிருந்து இருக்கன்குடி வழியாக மாசாா்பட்டிக்கு சென்று கொண்டிருந்தாா். இருக்கன்குடி அணை பாலம் அருகே வந்த போது, சாலையில் மாடு குறுக்கீட்டதால், ரித்தீஸ் நிலை தடுமாறி வாகனத்திலிருந்து கீழே விழுந்தாா். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து இருக்கன்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments