ராஜபாளையத்தில் சிறுவன் தற்கொலை
Updated On : 1 மார்ச், 2026 at 10:11 PM
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் பிணையில் வந்த சிறுவன் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ராஜபாளையம் துரைச்சாமிபுரம் தெருவைச் சோ்ந்த அய்யம்மாள் பேரன் மகேஷ் (17). இவருக்கு பெற்றோா் இல்லாததால் பாட்டியுடன் வசித்து வந்தாா்.
Updated On : 2 மார்ச், 2026 at 3:05 AM
இந்த நிலையில், கடந்த வாரம் இரு சக்கர வாகனம் திருட்டு வழக்கில் தெற்கு காவல் நிலைய போலீஸாா் மகேஷை கைது செய்தனா்.
Advertisement
சனிக்கிழமை பிணையில் வந்த இவா், பாட்டி வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.