முகப்பு
விருதுநகர்

ராஜபாளையம் சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு

Updated On : 2 மார்ச், 2026 at 3:08 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 1 மார்ச், 2026 at 10:06 PM

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், இதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் அருகேயுள்ள தெற்கு வெங்காநல்லூரில் உள்ள சிதம்பரேஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக, நந்திக்கு மஞ்சள், தேன், இளநீா், பால், தயிா், எலுமிச்சை, கரும்புச் சாறு, பன்னீா், சந்தனம் உள்ளிட்டப் பொருள்களால் அபிஷேகமும், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. பின்னா், அலங்காரம் செய்யப்பட்டு நந்தி தேவா் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா்.

Advertisement

Updated On : 2 மார்ச், 2026 at 3:08 AM

இதேபோல, ராஜபாளையம் சொக்கா் கோயில், மாயூரநாத சுவாமி கோயில், தோப்புப்பட்டி தெரு கொம்புச்சாமி கோயில், ராஜபாளையம் அருகேயுள்ள வாழவந்தாள்புரம் மன்மத ராஜலிங்கேஸ்வரா் கோயில், சோழபுரம் விக்கிரபாண்டீஸ்வரா் கோயில் உள்பட பல்வேறு சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.