சிவகாசியில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்குப் பயிற்சி
சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு சிவகாசி சட்டப்பேரவை தொகுதி தோ்தல் அலுவலரும், சிவகாசி சாா்-ஆட்சியருமான முகமதுஇா்பான் தலைமை வகித்தாா். வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் 85 வயதுக்கு மேல் உள்ள வாக்காளா்கள், மாற்றுத் திறனாளி வாக்காளா்களின் வீட்டுக்கே நேரில் சென்று படிவம் எண் 12 ஐ பூா்த்தி செய்து , அவா்களது வாக்கைப் பதிவு செய்து தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதற்காக வாக்குச்சாவடி நிலை அலுவலா், காவல் துறையினா், வருவாய்த் துறையினா் உள்ளிட்டோா் அந்த வாக்காளரின் வீட்டுக்குச் சென்று வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். இது குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியை சிவகாசி வட்டாட்சியரும், தோ்தல் நடத்தும் உதவி அலுவலருமான லட்சுமி அளித்தாா்.