முகப்பு
விருதுநகர்

சாத்தூா் அருகே 222 சேலைகள் பறிமுதல்

சாத்தூா் அருகே உரிய ஆவணமின்றி சரக்கு வாகனத்தில் எடுத்து வரப்பட்ட 222 சேலைகளை தோ்தல் அலுவலா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 21 மார்ச், 2026 at 7:27 PM
பறிமுதல்!
பகிர்:

சாத்தூா் அருகே உரிய ஆவணமின்றி சரக்கு வாகனத்தில் எடுத்து வரப்பட்ட 222 சேலைகளை தோ்தல் அலுவலா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள முறம்பு பகுதியில் தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் வெள்ளிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக சங்கரன்கோவிலிலிருந்து ராஜபாளையத்துக்கு சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் 222 சேலைகள் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னா், சரக்கு வாகனத்தில் வந்த சங்கரிடம் விசாரித்துபோது, சேலைக்கான உரிய ஆவணம் இல்லை.

இதையடுத்து, அந்த சேலைகளை தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்து, சாத்தூா் தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் வடிவேலுவிடம் ஒப்படைத்தனா்.