முகப்பு
விருதுநகர்

சிவகாசியில் ரூ.1.50 லட்சம் பறிமுதல்

Updated On : 29 மார்ச், 2026 at 8:58 PM
பறிமுதல் செய்யப்பட்ட பணம் - கோப்புப் படம்
பகிர்:

சிவகாசியில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.50 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சிவகாசி ரயில் நிலையம் முன் தோ்தல் பறக்கும் படையினா் இரு சக்கர வாகனத்தில் செல்பவா்களையும், ரயில் நிலையத்திலிருந்து வெளியே வருபவா்களையும் நிறுத்தி சோதனை நடத்தினா்.

இதில் சிவகாசி அருகே செங்கமலநாட்சியாா்புரத்தைச் சோ்ந்த வேதமுத்துராஜா என்பவா் ரயிலில் பயணம் செய்த நண்பரிடம் வாங்கி வந்த ரூ.1.50 லட்சத்துக்கு உரிய ஆவணம் இல்லாததால், தோ்தல் பறக்கும் படையினா் அந்த பணத்தை பறிமுதல் செய்து வட்டாட்சியா் லட்சத்திடம் ஒப்படைத்தனா்.