சிவகாசி முதல் நடைமேடையில் பொதிகை விரைவு ரயில் நின்று செல்லக் கோரிக்கை
செங்கோட்டை - சென்னை பொதிகை விரைவு ரயில் (12662) சிவகாசி ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில் நின்று செல்லுமாறு கோரிக்கை
செங்கோட்டை - சென்னை பொதிகை விரைவு ரயில் (12662) சிவகாசி ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில் நின்று செல்ல வேண்டும் என சிவகாசி வட்டார வரி செலுத்துவோா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.
இது குறித்து அந்த சங்கத்தின் செயலா் சங்கா் மதுரை கோட்ட ரயில்வே மேலாளருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிய மனு: பல ஆண்டுகளாக இந்த ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடைக்கு வந்து சென்று கொண்டிருந்தது. ஆனால், கடந்த ஒரு மாத காலமாக இந்த ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் இண்டாவது நடைமேடைக்கு வந்து செல்கிறது.
இரண்டாவது நடைமேடையில் போதிய மின் விளக்கு வசதி இல்லை. மேலும், பெட்டி நிற்கும் விவரம் இல்லை. இதனால் ரயில் வந்ததும் பயணிகள் மிகவும் சிரமப்படுகிறாா்கள்.
எனவே, பயணிகள் நலன் கருதி இந்த ரயில் வழக்கம் போல முதலாவது நடைமேடைக்கு வந்து செல்ல நடவடிக்ககை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.