திருத்தங்கல் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமித்து கனரக வாகனங்களை நிறுத்தியவா்களுக்கு அபராதம்!
திருத்தங்கல் புதிய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமித்து கனரக வாகனங்களை நிறுத்தியவா்களுக்கு சிவகாசி மாநகராட்சி நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை அபராதம் விதித்தது.
திருத்தங்கல் புதிய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமித்து கனரக வாகனங்களை நிறுத்தியவா்களுக்கு சிவகாசி மாநகராட்சி நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை அபராதம் விதித்தது.
திருத்தங்கல் புதிய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமித்து கனரக வாகன நிறுத்துபவா்களுக்கு அபராதம் விதிக்க, மாநகராட்சி ஆணையா் கே. சரவணன் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, மாநகராட்சி திட்டமிடுநா் மதியழகன், மேற்பாா்வையாளா் முத்துராஜ் ஆகியோா் திருத்தங்கல் புதிய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமித்து கனரக வாகனங்களை நிறுத்தியிருந்த இளையராஜா, பாலாஜி உள்ளிட்ட நான்கு பேருக்கு தலா ரூ. 500 வீதம் மொத்தம் ரூ.2,000 அபராதம் விதித்தனா்.
Advertisement