தேவையானவை:
கேரட் - 250 கிராம்,
சாம்பார் பொடி - 25 கிராம்,
துவரம் பருப்பு - 100 கிராம்,
சீரகம் - 1 ஸ்பூன்,
நெய் - 25 கிராம்,
கொத்துமல்லி,
கறிவேப்பிலை சிறிதளவு,
உப்பு 1 ஸ்பூன்.
செய்முறை: கேரட்டைத் தோலைச் சீவி நைஸôகத் துருவிக் கொள்ள வேண்டும். கேரட் துருவலைச் சிறிது எண்ணெய்யில் வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து சாறு பிழியவேண்டும். பருப்பை வேகவைத்த தண்ணீர், கேரட் சாறு, உப்பு, சாம்பார் பொடி ஆகியவற்றைக் கலந்து கொத்தமல்லி கறிவேப்பிலை போட்டு நன்றாக கொதிக்க வைத்து கீழே இறக்கி நெய்யில் சீரகத்தை வறுத்து போட்டால் மழைக்கு இதமாகக் குடிப்பதற்கு கேரட் சூப் தயார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.