முகப்பு
தினமணி கதிர்

கைவினைக் கலை: இயற்​கை​யின் நண்​பன்!

வாழை தனது வாழ் நா ளில் இலை, காய், பூ, தண்டு ஆகி ய வற்றை மனி தர் க ளுக் குத் தரு வ து டன் வாழ் வுக் குப் பின் தன் சந் த தியை வாழை யடி வாழை யாக விட் டுச் செல் கி றது. அதோடு மட் டு மல் லா மல் மரத்தை வெட்

Updated On : 27 டிசம்பர், 2023 at 2:49 PM
பகிர்:

வாழை தனது வாழ் நா ளில் இலை, காய், பூ, தண்டு ஆகி ய வற்றை மனி தர் க ளுக் குத் தரு வ து டன் வாழ் வுக் குப் பின் தன் சந் த தியை வாழை யடி வாழை யாக விட் டுச் செல் கி றது. அதோடு மட் டு மல் லா மல் மரத்தை வெட் டிய பின் ன ரும் சுற் றுச் சூ ழ லைப் பாது காக் கும் வகை யி லான பொருட் களை உரு வாக் கு வ தற் காக தனது உட லா கிய நாரி னை யும் தந்து இயற் கை யின் நண் ப னாக இருந்து வரு கி றது என் றால் அது மிகை யல்ல. கழி வை யும் காசாக் க லாம் என் கிற வகை யில் வாழை நார் மூலம் திண் டுக் கல் மாவட் டம் சிறு ம லை யில் உள்ள "ஷேர்' எனும் அர சு சாரா தொண்டு நிறு வ னம் மக ளிர் கூட் ட மைப் பு களை ஒருங் கி ணைத்து வாழை நார் மூலம் கைவி னைப் பொருட் க ளைச் செய்ய கற் றுக் கொடுத்து வரு கி றது. சுற் றுச் சூழ லைப் பாது காக் கும் வகை யில் இப் பொ ருட் கள் உள் ள தால் வெளி நாட் டி னர் இவற்றை வாங் கு கின் ற னர். கை வண் ணத் தால் கழி வு க ளும் காசா கும் விதம் குறித்து கூறு கி றார் நிறு வன ஒருங் கி ணைப் பா ளர் தரணி.

திண் டுக் கல் மாவட் டத் தில் உள்ள சிறு மலை மலை வா ழைக்கு மிக வும் பெயர் பெற் றது. பழ னி யில் தயா ரா கும் பஞ் சா மிர் தத் திற் கான பெரு ம ளவு வாழைப் ப ழங் கள் இங் கி ருந்து தான் செல் கின்றன. ஏற் க னவே நாங் கள் பனை ஓலை மூல மான பொருட் கள் தயாரிப்பதற்குப் பயிற்ச

பயிற்சியை அளித்து வருகிறோம். எங்கள் இயக்குநர் முருகேசன் சிறுமலையைச் சார்ந்தவர் என்பதனால் இங்கு அதிகமாக வாழை நார் கிடைப்பதனாலும் பனை ஓலை மூலம் பொருட்களைத் தயாரிப்பதைப் போல  வாழைநார்ப் பொருட்களையும் செய்து பார்த்தோம்.  சிறுமலையில் வாழை நார் அதிகம் கிடைப்பதால் 15 பெண்கள் குழுக்களை ஒருங்கிணைத்து  நான்கு மாத பயிற்சி அளித்து வருகிறோம். பயிற்சியில் கலந்து கொள்ளும் நபர் ஒருவருக்கு ரூ.1,500 உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

Advertisement

மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு ஆணையர் அலுவலகம் மூலம் பயிற்சி முடித்த பெண்களுக்கு 15 நாள் பயிற்சியாக திறன் வளர்ப்பு மேம்பாட்டு பயிற்சி பட்டறை நடத்தி வருகிறது.    தற்போது இப்பயிற்சியில் 30 பெண்கள் பங்கேற்று வருகின்றனர்.

இதைத் தவிர கைவினைக் கலைஞர்களுக்கான மருத்துவ காப்பீடு அடையாள அட்டையை கைவினைப் பொருள் மேம்பாட்டு ஆணையர் வழங்கி உள்ளார்.

கைவினைஞர்கள் ரூ.150 செலுத்த வேண்டும், அரசு ரூ.850 செலுத்துகிறது. இதனால் கைவினைஞர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆண்டுக்கு ரூ.15000 வரை மருத்துவ வசதிகளைப் பெற முடியும். இதைத் தவிர பயனாளிகளின் குடும்பத்தில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை ரூ.600 வீதம் உதவித் தொகையையும் அரசு வழங்குகிறது.

பயிற்சியை முடித்த பெண்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே கூட வாழைநார் பொருட்களைத் தயாரிக்கலாம். மூலப் பொருளான 10 நார்கள் கொண்ட ஒரு கட்டை 5 ரூபாய்க்கு வாங்குகிறோம்.

வண்ணங்களைச் சேர்ப்பதற்காக ஏஜோ ப்ரீ டை என்ற இயற்கை சாயமுறையில் நார்கள் நனைக்கப்பட்டு வண்ணம் கூட்டப்படுகிறது. இந்த வாழை நார்களைக் கொண்டு பழக்கூடைகள், மேஜை தட்டுகள், சாப்பாட்டு கூடை, குப்பை கூடை, ஒயின் பாட்டில் உறை, தபால் பெட்டிகள், பெண்கள் காதில் அணியும் தோடுகள், கழுத்தில் அணிவதற்கான நெக்லஸ், லேடீஸ் ஹேண்ட் பேக், பேனா ஸ்டாண்ட், குழந்தைகளுக்கான ஹேண்ட் பேக் எனப் பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.  மூலப் பொருட்களின் விலை குறைவாக இருந்தபோதிலும் ஒரு பொருளைத் தயாரிக்க குறைந்தபட்சம் 2 நாட்கள் ஆவதனால் 2 நாள் கூலியாக குறைந்தது ரூ.130 கொடுக்கும் பட்சத்தில் நார் பொருளின் விலை ரூ.135 ஆக ஆகிவிடுகிறது.  நாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களைத் தலைமை நிறுவனமான "ஷேரு'க்கு அனுப்பி விடுகிறோம். அகில இந்திய அளவில் நடைபெறும் கைவினைப் பொருள் கண்காட்சியில் வாழைநார் பொருட்கள் இடம்பெற்று விடுகின்றன.

சுற்றுச்சூழலைப் பாதிக்காத பொருட்களை உபயோகிக்க வெளிநாட்டவர் விரும்புவதனால் விலையைப் பற்றி கருத்தில் கொள்ளாததால் வெளிநாடுகளுக்கு இப்பொருட்கள் ஏற்றுமதியாகின்றன. சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் தனி கவனம் செலுத்தும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு 2.5 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்த மாவட்ட ஆட்சியர் வாழைநார் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களைப் பிரபலப்படுத்துவதற்காக தனியாக கண்காட்சி நடத்திக் கொடுத்ததுடன் புதிய டிசைன்களைத் தயாரிக்கவும், சந்தைப்படுத்தவும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

உத்தரப்பிரதேசத்திலிருந்து தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த பேஷன் டிசைனர் பெட்ரூல் என்பவரை நாங்கள் வரவழைத்துள்ளோம். தற்போது கணினி மூலம் வரையப்பட்ட மாடல்கள் குறித்த பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்களைக் கவரும் வகையிலான புதுபுது டிசைன்களில் பொருட்கள் தயாரிக்க முடியும்'' என்றார் ஒருங்கிணைப்பாளர் தரணி.

வாழை நார் பொருட்கள் விலை சற்று கூடுதலாக இருந்தாலும், சுற்றுச் சூழலைக் கெடுக்கும் பிளாஸ்டிக் பொருட்களைப் உபயோகிப்பதை குறைத்துக் கொண்டு இந்தப் பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் இயற்கையைப் பாதுகாப்பதில் நமது பங்கும் இருக்கிறது என்பதில் மகிழ்ச்சி கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments