தினமணி கதிர்

தலை வணங்கி வா... கேட்டது கிடைக்கும்!

சென்னை ஆவடி}அம்பத்தூர் இடையே அமைந்துள்ள திருமுல்லைவாயிலில் ராகவேந்திரா ஸ்வாமிகளுக்காக பிருந்தாவன் என்ற கோயிலைக் கட்டியுள்ளார் நடிகர் லாரன்ஸ் ராகவா. இந்தக் கோயிலைக் காண வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாள்

மனோஜ் கிருஷ்ணா

சென்னை ஆவடி}அம்பத்தூர் இடையே அமைந்துள்ள திருமுல்லைவாயிலில் ராகவேந்திரா ஸ்வாமிகளுக்காக பிருந்தாவன் என்ற கோயிலைக் கட்டியுள்ளார் நடிகர் லாரன்ஸ் ராகவா. இந்தக் கோயிலைக் காண வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதைக் கேள்விப்பட்ட ராகவேந்திரா ஸ்வாமியின் தீவிர பக்தரான ரஜினிகாந்த், லாரன்ûஸ அழைத்து "தலை வணங்கி வா, கேட்டது கிடைக்கும்' என்ற வாசகத்தைக் கோயில் வாசலில் எழுதும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி, ராகவேந்திரா ஸ்வாமிகளின் பிறந்த நாளான பிப்.21}ம் தேதி வாசகத்தை எழுதி வைத்து அன்னதானம், சிறப்பு பூஜை என விமரிசையாகக் கொண்டாடியிருக்கிறார் லாரன்ஸ்.

""சினிமாவில் நல்ல நிலைக்கு வந்த பிறகு எனக்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்று நினைக்கவில்லை. நான் இந்த அளவுக்கு உயரக் காரணமாக இருந்த ராகவேந்திரா ஸ்வாமிக்கு கோயில் கட்ட வேண்டும் என்பது மட்டும்தான் என் லட்சியமாக இருந்தது. அதன்படி இந்தக் கோயிலைக் கட்டியிருக்கிறேன். நாள்தோறும் பலர் வந்தாலும் வியாழக்கிழமைதோறும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகிறார்கள். எதிர்காலத்தில் தமிழகத்தில் இன்னும் பல ராகவேந்திரா கோயில்களைக் கட்டத் திட்டமிட்டிருக்கிறேன்'' என்கிறார் லாரன்ஸ் ராகவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT