தினமணி கதிர்

திரைக்கதிர்: உள்ளத்தை உருக்கும் பாடல்!

அண்ணன், தம்பி பாசத்தை மையமாக வைத்து "பாலு தம்பி மனசிலே' என்ற புதிய படம் உருவாகி வருகிறது. சரண்யா மோகன், புதுமுகம் நிர்மல் நடிக்கும் இந்தப் படத்தை ஜமீன்ராஜ் இயக்குகிறார். இந்தப் படத்துக்

மனோஜ் கிருஷ்ணா

அண்ணன், தம்பி பாசத்தை மையமாக வைத்து "பாலு தம்பி மனசிலே' என்ற புதிய படம் உருவாகி வருகிறது. சரண்யா மோகன், புதுமுகம் நிர்மல் நடிக்கும் இந்தப் படத்தை ஜமீன்ராஜ் இயக்குகிறார். இந்தப் படத்துக்காக சென்னை நகர் கூடுதல் காவல்துறை ஆணையர் எம்.ரவி ஒரு பாடலை எழுதியுள்ளார். "ஆரிராரோ ஆரிராரோ ஆரிராராராரிரோ அன்னை என்பது அண்ணன் ஆனது தம்பி மடி சாய தாயாகுது...' எனத் தொடங்கும் இந்தப் பாடலுக்கு தேவேந்திரன் இசையமைத்துள்ளார். ""இது அனைத்துத் தரப்பினரும் விரும்பும் குடும்பப் படம்; மென்மையான காதல், நாகரிகமான நகைச்சுவைக் காட்சிகள் போன்றவற்றின் பின்னணியில் அழுத்தமான மெúஸஜை சொல்லியிருக்கிறோம். ஐ.பி.எஸ். அதிகாரி எம்.ரவி எழுதியுள்ள பாடல் வரிகள், கேட்பவர்களின் உள்ளத்தை உருக்கும். பாடலும் அதைப் படமாக்கிய விதமும் படத்தின் ஹை லைட் ஆக அமையும்'' என்கிறார் இயக்குநர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT