தினமணி கதிர்

த்ரிஷாவின் மும்மொழிக் கொள்கை!

தெலுங்கில் வெங்கடேஷ், ரவிதேஜா ஆகியோரின் படங்களிலும் ஹிந்தியில் அக்ஷய்குமாருடன் "கட்டா மிட்டா' படத்திலும் நடித்து வருகிறார். சிம்புவுடன் நடித்த "விண்ணைத் தாண்டி வருவாயா' படம் முடிவடைந்துவிட்டது. ஹிந்தி

மனோஜ் கிருஷ்ணா

தெலுங்கில் வெங்கடேஷ், ரவிதேஜா ஆகியோரின் படங்களிலும் ஹிந்தியில் அக்ஷய்குமாருடன் "கட்டா மிட்டா' படத்திலும் நடித்து வருகிறார். சிம்புவுடன் நடித்த "விண்ணைத் தாண்டி வருவாயா' படம் முடிவடைந்துவிட்டது. ஹிந்திக்கு முக்கியத்துவம் தருவதால் தமிழ்ப் பட வாய்ப்புகளை ஏற்க மறுக்கிறார் என வரும் தகவல்கள் பற்றி கேட்டபோது... ""அப்படியெல்லாம் இல்லை. தெலுங்கிலும் ஹிந்தியிலும் பிஸியாக இருந்தபோது வந்த தமிழ்ப் பட வாய்ப்புகளை மட்டும்தான் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது கமல் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகி ஆகியிருக்கிறேன். "மர்மயோகி' படம் தள்ளிப்போனதால் கமலுடன் நடிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் இப்போதுதான் தீர்ந்தது. இந்த வருடம் முதல் ஒரு புதிய பாலிசியைக் கடைப்பிடிக்கவுள்ளேன். அது... வருடத்துக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தலா 3 படங்களில்நடித்துவிட வேண்டும் என்பதுதான். அதற்கேற்ப கால்ஷீட்டை திட்டமிட்டு ஒதுக்குவேன்'' என தன்னுடைய மும்மொழிக் கொள்கையை முன்மொழிந்தார் த்ரிஷா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT