தினமணி கதிர்

செய்து பாருங்க...: பலாச்சுளை அல்வா

பலாப் பழச் சீசன் முடியும் காலம் வந்து கொண்டு இருக்கிறது. அதற்குள் சுவையான பலாச்சுளை அல்வாவைச் செய்து பார்த்துவிடலாமே! என்ன தேவை? நாரில்லாத பலாச்சுளை-15 சர்க்கரை-200 கிராம் முந்திரிப் பருப்பு-20 ஏலக்கா

ஆர். ஜெயலட்சுமி

பலாப் பழச் சீசன் முடியும் காலம் வந்து கொண்டு இருக்கிறது. அதற்குள் சுவையான பலாச்சுளை அல்வாவைச் செய்து பார்த்துவிடலாமே!

என்ன தேவை?

நாரில்லாத பலாச்சுளை-15

சர்க்கரை-200 கிராம்

முந்திரிப் பருப்பு-20

ஏலக்காய் பொடி செய்தது- கால் டீ ஸ்பூன்

நெய்-50 கிராம்

எப்படிச் செய்வது?

பலாச்சுளைகளை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். கனமான பாத்திரத்தில் சிறிது நெய்விட்டு நறுக்கிய பலாச்சுளைகளைப் போட்டு வதக்க வேண்டும். நன்றாகப் பதம் ஆனவுடன் இறக்கி நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் சர்க்கரையைப் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். முந்திரிப் பருப்பை நெய்விட்டு வறுத்துக் கொண்டு, மீதி உள்ள நெய்யையும்விட்டு நன்றாகக் கிளறிப் பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது இறக்கி, வறுத்த முந்திரிப் பருப்பைப் போட்டு கிளறி வைக்க வேண்டும். இப்போது கமகமக்கும் சுவையான பலாச்சுளை அல்வா ரெடி. சுவைக்குச் சுவை... ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT