முகப்பு
தினமணி கதிர்

சுற்றுச்சூழல்: ஐந்து கார்களுக்குப் பதிலாக ஒரு கார்!

பெங்களூரில் முன்பெல்லாம் எப்போதும் ஜிலுஜிலுவென்று இருக்கும். ஓய்வு பெற்றவர்கள் வந்து தங்கியிருக்கக் கூடிய சொர்க்கம்'' என்று பெங்களூரை வர்ணிப்பார்கள். ஆனால் இப்போது பெங்களூரில் தினமும் 32 டிகிரி செல்சி

Updated On : 27 டிசம்பர், 2023 at 3:54 PM
பகிர்:

பெங்களூரில் முன்பெல்லாம் எப்போதும் ஜிலுஜிலுவென்று இருக்கும். ஓய்வு பெற்றவர்கள் வந்து தங்கியிருக்கக் கூடிய சொர்க்கம்'' என்று பெங்களூரை வர்ணிப்பார்கள். ஆனால் இப்போது பெங்களூரில் தினமும் 32 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொளுத்துகிறது. பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த வெப்ப நிலை இப்போது இல்லை. நமது கண்களுக்கு முன்பாகவே புவி வெப்பமடைதலின் கொடுமையை நாள்தோறும் அனுபவித்து வருகிறோம். நமது வருங்காலச் சந்ததியினர் என்ன பாடுபடப் போகிறார்களோ? புவி வெப்பமடைதலுக்கு எதிராக நம்மால் முடிந்ததை நாம் செய்ய வேண்டாமா?'' என்று கேட்கிறார் லாவண்யா அருண்.

லாவண்யா கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சித் துறையில் பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தவர். 2007 ஆம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பில் துணை மேலாளர் நிலை வரை உயர்ந்தவர்.

அவர் "தணலில் தாய்மண்' என்ற புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் நம்மால் முடிந்த அளவுக்குப் புவி வெப்பமடைதலை எவ்வாறு தடுக்கலாம் என்று விளக்கியிருக்கிறார். கணவர் அருண், மகள் அனன்யாவுடன் பெங்களூரில் உள்ள லாவண்யா அருணிடம் பேசினோம்.





கணவர் அருண், மகள் அனன்யாவுடன்...


தொலைக்காட்சித் துறையில் செயல்பட்டுக் கொண்டிருந்த உங்களுக்குச் சுற்றுச் சூழல் பாதுகாப்பின் மீது எப்படி அக்கறை ஏற்பட்டது?

நான் 2005 ஆம் ஆண்டு பிபிசி தொலைக் காட் சி யில் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தேன். சுற்றுச்சூழலில் பாதிப்பு ஏற்படுவதைப் பற்றிய அந்த நிகழ்ச்சி என்னை மிகவும் பாதித்தது. அந்தப் பாதிப்பில் "தாய்மண்' என்ற பெயரில் ஒரு கற்பனைக் கதையை வடிவமைத்து திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவிடம் அளித்தேன். அது மிகவும் நன்றாக வந்திருப்பதாக அவர் சொன்னார்.

அதன்பின்பு சுற்றுச் சூழல் பற்றி நான் எழுதிய "தணலில் தாய்மண்' புத்தகம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த வெப்பத்தைவிட இப்போது பலமடங்கு அதிகரித்துவிட்டது. கடலின் நீர் மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது. ஆஸ்திரேலியாவில் பவளப் பாறைகள் அழிந்து வருகின்றன. நமது சுந்தரவனக் காடுகளில் வாழ்ந்து வந்த அரிய புலி வகைகள் வெப்பம் அதிகரித்துவிட்ட காரணத்தால் அழிந்து வருகின்றன. ஆர்டிக் பகுதியின் பனிப் பாறைகள் உருகிவிடுகின்றன. கடலின் நீர்மட்டம் இதனால் அதிகரித்து, பூமியின் பல இடங்களைக் கடல் விழுங்கிவிடுகிறது. புயல், மழை, வெள்ளம் எனப் பருவநிலை காலம் மாறி வருகின்றன. நமது உலகம் அழிந்து கொண்டு வருகிறது. ஆனால் நாம் இதைப் பற்றிக் கவலைப்படாமல் உலகம் அழிவதற்கான செயல்களை ஒவ்வொரு நாளும் செய்து வருகிறோம். எனவே நம்மால் முடிந்தவரை புவிவெப்பமடைதலுக்கு எதிராகச் செயல்பட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.

சாதாரண மனிதர் ஒருவர் புவி வெப்பமடைதலுக்கு எதிராக பெரிய அளவில் என்ன செய்துவிட முடியும்?

சாதா ரண மனி த ரும் கூட புவி வெப்பமடைதலுக்கு எதிராக நிறையச் செய்ய முடியும்.

பிளாஸ்டிக் சுற்றுச் சூழலுக்கு மிகவும் கேடானது. எனவே நாம் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தக் கூடாது. மண்ணில் புதைக்கப்பட்ட பிளாஸ்டிக் 100 ஆண்டுகளானாலும் அழியாது. பூமிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் நாம் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதை இன்னும் நிறுத்தவில்லை. இந்த நிலை மாற வேண்டும்.

வெயில் காலம் வந்ததும் வசதியானவர்கள் மட்டுமில்லை, நடுத்தர வர்க்கத்தினரும் வீட்டில் ஏசி பொருத்திக் கொள்ள விரும்புகிறோம். ஏசி பொருத்தப்பட்ட இடத்தில் மிகவும் ஜில்லென்றுதான் இருக்கிறது. ஆனால் ஏசியிலிருந்து வெளிப்படும் பல மடங்கு வெப்பக் காற்று கட்டடத்தின் வெளிப்புறத்தில் சுற்றுப்புறத்தில் உள்ள காற்றை மிகவும் சூடாக்குகிறது. முடிந்தவரை ஏசியைத் தவிர்க்க வேண்டும். இயற்கையான முறைகளால் வீடு வெப்பமடைவதைத் தடுக்க முயற்சி செய்ய வேண்டும்.

நாம் மேல்நிலைத் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக மோட்டார் பொருத்துகிறோம். ஆனால் மோட்டாரைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் முறைப்படி பழுது பார்ப்பது கிடையாது. இதனால் மோட்டார் நீண்ட நேரம் ஓடிக் கொண்டிருந்தாலும், டேங்க் நிறைவதில்லை. இதனால் மின்சாரம் வீணாகிறது. மின்சாரம் மட்டும் வீணாவதில்லை. அந்த மின்சாரத்தைத் தயாரிக்கத் தேவைப்படும் எரிபொருளும் வீணாகிறது. அப்படி மின்சாரத்தைப் பயன்படுத்தி நிரப்பிய தண்ணீரைக் கொஞ்சமும் கவலைப்படாமல் தேவைக்கு மேல் செலவழிக்கிறோம். இதனால் நிலத்தடி நீர் குறைந்துவிடுகிறது. வெப்பம் அதிகரிக்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை மோட்டார், வயரிங் போன்றவற்றைப் பழுது பார்த்துச் சரி செய்வதன் மூலம் மின்சாரம் வீணாகாமல் தடுக்க முடியும். சுற்றுச்சூழல் பாதிப்பை நம்மால் முடிந்தவரை நாம் தடுக்கலாம்.

கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டிருப்பார்கள். திடீரென்று வேறொரு வேலை வந்துவிடும். உடனே கம்ப்யூட்டரை அணைக்காமல் அப்படியே விட்டுவிட்டுச் சென்று விடுவார்கள். இதனால் மின்சாரம் வீணாகும். கம்ப்யூட்டரில் இருந்து வரும் வெப்பம், புவியின் வெப்ப நிலை உயரக் காரணமாகிறது. , மின்விசிறி, மின்விளக்கு எல்லாவற்றையும் தேவையில்லாதபோது அணைத்து வைக்க வேண்டும்.

பெங்களூரில் அபார்ட்மென்ட்களில் இப்போது ஒருமுறையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதாவது, அபார்ட்மென்டில் குடியிருப்பவர்கள் எல்லாரும் தினம்தோறும் அவரவர்களுடைய காரைப் பயன்படுத்துவதில்லை. யாராவது ஒருவருடைய காரில் எல்லாரும் ஏறி தத்தமது அலுவலகங்களுக்குச் செல்கிறார்கள். இதனால் நாள்தோறும் 5 கார்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக ஒரு கார் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எரிபொருள் மிச்சமாகிறது. காரிலிருந்து வெளிப்படும் புகையின் அளவைக் குறைக்க முடிகிறது. வெப்பத்தின் அளவைக் குறைக்க முடிகிறது. இப்படி எல்லாரும் செய்தால் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க முடியும். ஒலியால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் மாசையும் குறைக்க முடியும்.

அதுபோல ஒவ்வொரு மாதமும் 4 ஆம் தேதி "பஸ் டே' என்கிறார்கள். கார் வைத்திருப்பவர்களில் பலர் அன்று ஒருநாள் மட்டும் காரைப் பயன்படுத்தாமல் பஸ்ûஸப் பயன்படுத்துகிறார்கள். இதனால் எவ்வளவு எரிபொருள் மிச்சமாகிறது? வெளிப்படும் எவ்வளவு புகை குறைந்து போகிறது?

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் புவி வெப்பமடைவதற்குக் காரணம், சாதாரண மனிதர்களாகிய நாம்தான் என்று சொல்வதைப் போல உள்ளதே?

சாதா ரண மனி தர் க ளாகிய நாமும் ஒரு காரணம்தான். ஆனால் புவி வெப்பமடைவதற்கு நாம் மட்டும் காரணமல்ல. பெரிய பெரிய தொழிற்சாலைகளில் இருந்து வெளிப்படும் புகை, வெப்பம் புவி வெப்பமடைய பெரிய காரணம். ஆனால் அவற்றைச் சாதாரண மனிதர்களாகிய நம்மால் உடனே தடுத்து நிறுத்திவிட முடியாது. எனவே புவி வெப்பமடைவதைக் குறைக்க நம்மால் முடிந்ததை நாம் செய்ய வேண்டும்.

புவி வெப்பமடைவதற்கு அதிகக் காரணமாக இருப்பது, இந்தியா போன்ற வளரும் நாடுகள் அல்ல. உண்மையில் வளர்ந்த நாடுகள்தாம் காரணம். ஆனால் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் இதை ஒத்துக் கொள்வதில்லை. வளரும் நாடுகள் மீது அவர்கள் சுற்றுச் சூழல் பாதுகாப்புத் திட்டங்களைத் திணிக்கிறார்கள். இதன் மூலம் சுற்றுச்சூழலுக்குத் தங்களால் எந்தப் பாதிப்பும் இல்லை என்று காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.

உண்மையில் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டுமென்றால், புவி வெப்பமடைதலைக் குறைக்க வேண்டும் என்றால் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள்தாம் முன் முயற்சி எடுக்க வேண்டும். அதற்கு அந்நாட்டின் உற்பத்திமுறை மாற வேண்டும். இப்போது உள்ள உற்பத்தியின் அளவை வெகுவாகக் குறைக்க வேண்டும். அப்படிச் செய்தால் அவர்களுடைய பொருளாதாரம் பாதிக்கப்படும். அதற்கு அவர்கள் ஒத்துக் கொள்வார்களா?

எனவே வளரும் நாடுகளின் மீது சுற்றுச் சூழல் பாதுகாப்பைச் சுமத்தப் பார்க்கிறார்கள். அதனால்தான் கோபன்ஹேகன் மீட்டிங் இழுபறியில் முடிந்தது.

வளர்ந்த நாடுகளில் கார்பன் அதிகமாக வெளிப்படுவதை நிறுத்த இயற்கை எரிபொருள்களைப் பயன்படுத்த வேண்டும். வளர்ந்த நாடுகள் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்க முயற்சி செய்தால்தான் புவி வெப்பமடைதலைப் பெருமளவுக்குத் தடுக்க முடியும்.

வளரும் நாடுகளுக்குப் புவி வெப்பமடைதலைத் தடுப்பதில் பங்கில்லையா?

பங்கு இருக் கி றது. குறிப்பாக சுற்றுச் சூழல் பாதிப்பைப் பற்றி நமது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். சமீபத்தில் நமது அதிகாரிகள் விழிப்பாக இருந்ததால் வெளிநாட்டில் இருந்து நமது தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த இ-வேஸ்ட் எனப்படும் எலக்ட்ரானிக் பொருட்களின் கழிவுகள் இறக்குமதியாகாமல் தடுத்து நிறுத்தப்பட்டன. வெளிநாட்டின் கழிவுகளைப் போடும் குப்பைக் கூடையா நமது நாடு? வெளிநாட்டு மக்களுக்குச் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பைப் பற்றிய விழிப்புணர்வு இருக்கிறது. அதனால் சுற்றுச் சூழலைக் கெடுப்பதை அம்மக்கள் தடுத்துவிடுகிறார்கள். எனவே அவர்கள் நமது நாட்டை அவர்களுடைய குப்பைக் கூடையாக மாற்ற முயற்சிக்கிறார்கள். எனவே நமது மக்களுக்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதைப் பற்றிய விழிப்புணர்வு வர வேண்டும். ஏற்படுத்த வேண்டும். சுற்றுச் சூழல் பாதுகாப்பைப் பற்றிய விழிப்புணர்வு வந்துவிட்டால், ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த அளவு சுற்றுச் சூழல் கேட்டைத் தடுத்து நிறுத்துவார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →