பட்டாசு வெடிப்பதற்கு முன் கவனிக்க வேண்டியவை: பட்டாசு கொளுத்தும்போது இறுக்கமான ஆடைகளை அணியுங்கள். முடிந்தவரை பருத்தி ஆடைகளை அணியுங்கள். பெரியவர்கள் மேற்பார்வையிலேயே குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும்
தென்றல்
பட்டாசு வெடிப்பதற்கு முன் கவனிக்க வேண்டியவை:
பட்டாசு கொளுத்தும்போது இறுக்கமான ஆடைகளை அணியுங்கள். முடிந்தவரை பருத்தி ஆடைகளை அணியுங்கள்.
பெரியவர்கள் மேற்பார்வையிலேயே குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும்.
சட்டைப் பையில் பட்டாசுகளை வைத்துக்கொண்டு வெடிக்கக் கூடாது.
வெடிக்காத பட்டாசுகளை எக்காரணத்தைக் கொண்டும் கையில் எடுக்கக்கூடாது.
பட்டாசுகளை வீட்டிற்கு வெளியில்தான் வெடிக்க வேண்டும்.காலியான மைதானத்தில் வெடிப்பது கூடுதல் பாதுகாப்பு.
ராக்கெட் போன்ற வாணவேடிக்கைகளைக் குடிசைகள் இல்லாத திறந்தவெளியில் வெடிக்கவும்.
வெடிகளை டின், பாட்டில் போன்றவற்றில் வைத்து வெடிக்காதீர்கள்.
ஒரு வாளி நீரை எப்போதும் பக்கத்தில் வைத்துக்கொண்டேதான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
எல்லாப் பட்டாசுகளையும் நீண்ட வத்தியாலேயே கொளுத்தி வெடிக்க வேண்டும்.
எதிர்பாராத விதமாக உங்கள் மேல் தீப்பிடித்துக் கொண்டால் ஓடாதீர்கள். உடனே தண்ணீர் ஊற்றி அணையுங்கள் அல்லது கீழே படுத்து உருளுங்கள்.
தீப்புண்ணுக்கு உடனே தண்ணீர் ஊற்றுங்கள். இங்க், எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தாதீர்கள். உடனடியாக மருத்துவரிடம் செல்லுங்கள்.