தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ஆயுர்வேதம் அறிவுறுத்தும் உணவு முறைகள்

உணவுமுறைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ள இந்நாட்களில் ஆயுர்வேதம் அறிவுறுத்தும் உணவு உண்ணும் முறைகள் ஏற்புடையதா? காலத்திற்குத் தகுந்தாற்போல் அவற்றை மாற்றி அமைத்து ஆரோக்கியம் பெறலாமா? இன்ன இன்ன உணவுகள் மட்டமான

எஸ். சுவாமிநாதன்

உணவுமுறைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ள இந்நாட்களில் ஆயுர்வேதம் அறிவுறுத்தும் உணவு உண்ணும் முறைகள் ஏற்புடையதா? காலத்திற்குத் தகுந்தாற்போல் அவற்றை மாற்றி அமைத்து ஆரோக்கியம் பெறலாமா? இன்ன இன்ன உணவுகள் மட்டமானவை, இவை இவை என்றும் ஏற்புடையவை போன்ற குறிப்புகள் உள்ளனவா?

 சந்தானம், நாமக்கல்.

 வாக்படர் எனும் முனிவர் தான் இயற்றிய அஷ்டாங்க ஹிருதயம் எனும் ஆயுர்வேத நூலில் உணவைச் சாப்பிடுவதற்கு முன் செய்ய வேண்டிய விஷயங்களை மிகவும் விரிவாகக் கூறுகிறார். அவை அனைத்தும் சமஸ்கிருத மொழியில் உள்ளன. அதற்கான தமிழ் விளக்கம் கூறப்பட்டுள்ளது.

 காலே - குறித்த காலத்தில் உண்பது. அதாவது முன் உண்ட உணவு நன்றாகச் செரித்த பின் உண்பது.

 சாத்ம்யம் - வழக்கமாய் உபயோகிப்பதால் உடலுக்கு ஒத்துக் கொண்டதும்,

 சுசி - சுத்தமானதும்,

 ஹிதம் - நன்மை பயப்பதுமான,

 ஸ்நிக்தம் - நெய்ப்புள்ளதும்,

 உஷ்ணம் - சூடு ஆறாமல் வெதுவெதுப்பானதும்,

 லகு - எளிதில் ஜீரணமாகக் கூடியதும்,

 தன்மனா - மனதை உண்ணும் உணவில் கவனம் செலுத்தி,

 ஷட்ரஸம் - அறுசுவையுடன் கூடியதும்,

 மதுரப்ராயம் - இனிப்புச் சுவை அதிகம் சேர்த்து,

 ந அதித்ருதவிளம்பிதம் - அதிக வேகத்தில் அவசரமாகவோ, மிகவும் நிதானமாகவோ அல்லாமல்,

 ஸ்நாத - தண்ணீர்விட்டு நன்றாகக் குளித்த பிறகு,

 க்ஷýத்வான் - பசியுள்ளவனாக,

 விவிக்தஸ்தோ - தனிமையில்,

 தெüதபாதக்கரானன - கைகால்களை நன்றாக அலம்பி சுத்தம் செய்து கொண்டு,

 தர்ப்பயித்வாபித்ரூன், தேவான், அதிதீன், பாலகான், குரூன் - பித்ருக்கள் (தாய், தந்தையர்), தேவதைகள், வந்திருக்கும் விருந்தினர்கள், குழந்தைகள், தனக்குக் கல்வியைப் பயிற்றுவித்த ஆசிரியர் போன்றோருக்கு உணவளித்துத் திருப்தியுறச் செய்து,

 ப்ரதிபண்ணபரிக்ரஹான் - தன்னிடம் வைத்து வளர்க்கக் கூடிய

 திரஸ்ச:அபி - கிளிபோன்ற பறவைகள், குதிரை, மாடு போன்ற நான்கு கால்களுடைய மிருகங்கள்,

 ப்ரத்யவேக்ஷ்ய - சாப்பிட்டனவா என்பதை அறிந்த பிறகு,

 ஆத்மானம் சம்யக் சமிக்ஷ்ய - தன்னுடைய உடல்நிலை அன்றைய தினம் எவ்வாறு உள்ளது என்பதை நன்றாக அறிந்து, அதற்குத் தகுந்தபடி,

 அநிந்தன் அப்ருவன் - உணவை நிந்திக்காமல், பேசாமல்,

 இஷ்டை:ஸ:அஷ்நீயாத் - தன் மனதிற்குப் பிடித்தவர்களுடன் சேர்ந்து அமர்ந்து சாப்பிட வேண்டும்.

 இவற்றில் பல ஏற்புடையதே. காலத்திற்குத் தகுந்தாற்போல் மாற்ற முடியாத சிறந்த உணவுமுறைக் குறிப்புகள்.

 விலக்க வேண்டியவை:

 த்ருணகேசாதி ஜுஷ்டம் - புல், முடி போன்றவை விழுந்து கிடப்பதும்

 புன: உஷ்ணீக்ருதம் - குளிர்ந்து போனதை மறுபடி சூடாக்கியதும்

 சாகாவரான்னபூயிஷ்டம் - காய்கறி நிறைந்ததும், அந்தந்த இனங்களில் பெரும்பாலும் தாழ்ந்தவையாகக் கூறப்பட்ட உணவு நிறைந்ததும் ( உதாரணம்: பச்சைப் பயறு உயர்ந்தது, உளுந்து மிகவும் தாழ்ந்தது - தானியங்களில்)

 அத்யுஷ்ணலவணம் (போஜனம்) த்யஜேத் - மிகவும் சூடானதும், அதிகம் உப்பு சேர்த்ததுமான உணவைத் தவிர்க்கவும்.

 தொடர்ந்து சாப்பிடக் கூடாதவை:

 ததி - தயிர்

 ஆமமூலகம் - சமைக்காத முள்ளங்கி

 க்ருஷ - மெலிந்த; சுஷ்க - உலர்ந்து போன; வராஹ - பன்றி; அவி - செம்மறியாடு; கோ - பசு; மத்ஸ்ய - மீன்; மஹிஷ - எருமை; ஆமிஷம் - ஆகியவற்றின் மாமிசம்.

 மாஷ - உளுந்து; நிஷ்பாவ - அவரை (மொச்சை); சாலூக - சேப்பங்கிழங்கு, தாமரைக் கிழங்கு; பிஸ - தாமரைத்தண்டு; பிஷ்ட- மாவுப்பண்டம்; விரூடகம்- முளைத்த தானியம்; சுஷ்கசாகானி - உலர்ந்துபோன காய்கறிகள்; பாணிதம் - வெல்லப்பாகு போன்றவை தொடர்ந்து உபயோகிக்கக் கூடாது.

 தொடர்ந்து உண்பதற்கேற்றவை:

 சாலி - அரிசி; கோதூம - கோதுமை; யவ - யவை (வாற்கோதுமை), ஷஷ்டிக-அறுபதாங்குறுவை; ஜாங்கலம் - ஆடு,முயல் போன்ற வறண்ட பூமியிலுள்ள உயிரினங்கள்; சுநிஷண்ணக - ஆரைக்கீரை; ஜீவந்தி - கீரிப்பாலை; பாலமூலகம் - இளம் முள்ளங்கி; வாஸ்துகம் - வாஸ்த்துக்கீரை; பத்யா - கடுக்காய்; ஆமலக - நெல்லிக்காய்; ம்ருத்வீகா - திராட்சை; படோலீ - புடல்; முத்க - பச்சைப் பயறு; சர்க்கரா- சர்க்கரை; க்ருத - நெய்; திவ்யோதக - மழைநீர்; க்ஷீரபால்; ùக்ஷளத்ர - தேன்; தாடிம - மாதுளம்பழம்; ûஸந்தவம் - இந்துப்பு. இவை என்றென்றும் சாப்பிடக் கூடிய சிறந்த உணவுப் பொருட்களாகும்.

 (தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

SCROLL FOR NEXT