தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வாய் புண்ணுக்குத் திக்தகம்!

தாய்ப்பால் குடிக்கும் முதல் ஆறு மாதம் வரை குழந்தைக்கு வாயில் புண் ஏற்பட்டால் என்ன வைத்தியம் செய்யலாம்? மு.செல்வநாதன், சோளிங்கர். இளங் குழந்தைகளுக்கு வாயில் புண் ஏற்பட்டால் அதை ஒரு பெரிய நோயாகக் கருதத்

எஸ். சுவாமிநாதன்

தாய்ப்பால் குடிக்கும் முதல் ஆறு மாதம் வரை குழந்தைக்கு வாயில் புண் ஏற்பட்டால் என்ன வைத்தியம் செய்யலாம்?

மு.செல்வநாதன், சோளிங்கர்.

இளங் குழந்தைகளுக்கு வாயில் புண் ஏற்பட்டால் அதை ஒரு பெரிய நோயாகக் கருதத் தேவையில்லையென்றாலும் குழந்தைக்கு அது பெரிய தொந்தரவு தரக்கூடும். தாய்ப் பாலையோ, பாட்டில் பாலின் நிப்பிளையோ உறிஞ்சிக் குடிக்க முடியாது. சங்கு பாலாடை - ஸ்பூன்களை வாயில் வைத்துப் பால் புகட்ட முடியாத படியும் கஷ்டம். உணவுக் குறைவினால் நாளுக்குநாள் குழந்தை இளைத்துப் போகும்.

குழந்தைக்கு வாய்ப்புண் வர தாயின் மார்பு, பாட்டிலின் நிப்பிள் இவற்றின் மேல் உள்ள அழுக்கு காரணமாகலாம். மேலும் பால் தரும் தாயின் உணவில் புளிப்பு, உப்பு, காரம் அதிகம். நெய், பால் குறைவு, குழந்தைக்கு அதனால் பித்தம், ரத்தம் சூடாகும்படியான உடல்நிலை மலச்சிக்கல் அல்லது பேதி, சோகை போன்ற நிலைகளிலும் குழந்தைக்கு வாய்ப்புண் வரலாம். பெற்றோரின் ரத்த தோஷத்தினாலும் குழந்தைக்கு வாய்ப்புண் ஏற்படுவதுண்டு.

பால் தரும் தாயின் மார்புக் காம்பு வெடித்துப் புண் உள்ள நிலையில் குழந்தை வாய் வைத்துக் குடிக்கும்போது புண் வரலாம். மார்புக் காம்பு ரணம் ஆறுவதற்குக் கடுக்காய்த் தோல், மஞ்சள் கிழங்கு இரண்டையும் சேர்த்துக் காய்ச்சிய தண்ணீரால் புண்ணை அலம்ப வேண்டும். இதைச் சூடாய் வைத்துக் கொண்டு, நனைத்துப் பிழிந்த பஞ்சினால் சில நிமிடங்கள் ஒத்தடம் கொடுப்பது நல்லது. மார்புக் காம்பிலிருந்து கெட்ட ஊன் நீர் கசிந்து கொண்டிருந்தால், திரிபலா எனப்படும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் தோல்களின் சூரணம், வெள்ளை சந்தனத்தின் சூரணம், பொடித்த படிகாரத்தின் சூரணம், மஞ்சளின் சூரணம் இவற்றைக் கலந்து புண்ணின் மேல் தூவிவிட்டு, பஞ்சை அதன்மீது வைத்துக் கட்டிக் கொள்ள வேண்டும். ஊன் நீர்க் கசிவு நின்ற பிறகு, இந்தச் சூரணங்களையே முதலில் இரண்டு நாட்கள் தேனில் குழைத்துப் பூசவும். பிறகு தேங்காய் எண்ணெய்யில் குழைத்துப் பூசவும். புண்கள் ஆறிவிடும். மஞ்சள் சேர்த்துக் காய்ச்சிய தேங்காய் எண்ணெய்யை மார்புக் காம்பில் தடவிக் கொண்டிருந்தால் வெடிப்பு மறுபடியும் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.

தாய் ஒரு தரம் சிறு பேதிக்குச் சாப்பிட்டு, ரத்த சுத்திக்கு திக்தக கிருதம், கந்தக ரசாயனம், மஞ்சிஷ்டாதி கஷாயம் போன்ற மருந்துகளை சிலவாரம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

தாய் தந்தையருக்குப் பிரங்கம் (சிபிலிஸ்) வியாதி இருந்து, அதனால் விந்துவும் சினை முட்டையும் கெட்டுள்ள தருணத்தில் குழந்தை உருவாகி, பிறந்த குழந்தைக்கு, பிரங்க வியாதினால் வாய்ப்புண் ஏற்பட்டால், அது நலமாவது கடினம். மற்றபடி பித்த சூட்டினால் குழந்தைக்கு வரும் வாய்ப்புண் எல்லாம் தாய்க்கும் சேய்க்கும் அபத்திய உணவு நீக்கி, பத்திய உணவு கொடுத்தால் தானாகவே சீக்கிரம் ஆறிவிடும். தனி மருந்தே தேவையில்லை. தாயின் மார்புக் காம்பு, பால் பாட்டில்களின் நிப்பிள் இவற்றை மிகச் சுத்தமாய் வைத்துக் கொள்ள வேண்டும்.

வெளிப்பூச்சு மருந்துகள்- சுமார் 4 கிராம் வெங்காரத்தை இரும்புக் கரண்டியில் வைத்து தணலில் காய்ச்சினால், அது உருகிப் பிறகு பூத்துப் பொரியாக நிற்கும்.

இந்தப் பொரியை வழவழப்பாய்ப் பொடித்து தேன் நன்றாகக் குழைத்து குழந்தை வாய்ப்புண்ணில் ஒருநாளில் 2 -3 முறை தடவவும். வாய்ப்புண் விரைவில்

ஆறிவிடும்.

ஆயுர்வேத மருந்துக்கடைகளில் விற்கப்படும் திக்தகம் அல்லது மஹாதிக்தகம் எனும் நெய் மருந்தில் 4 -5 சொட்டு தேன் குழைத்து குழந்தையின் வாய்ப்புண்ணில் தடவி வர, வாய்ப்புண் விரைவில் குணமாகிவிடும்.

குடூச்யாதி கஷாயத்தை பால் கொடுக்கும் தாய் பருகுவதால், குழந்தையின் வாய்ப்புண் குணமாகிவிடும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

SCROLL FOR NEXT