தினமணி கதிர்

திரைக்கதிர்: ஹிட் பாடல்கள்!

நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு தனது திருமண நாளான ஜனவரி 27-ம் தேதி, திருச்சி அருகேயுள்ள சாந்தி ஆதரவற்றோர் காப்பகத்தில் இருந்து மனவளர்ச்சி குன்றிய ஐந்து ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுத்துள்ளார். வாழ்நாள்

மனோஜ் கிருஷ்ணா

நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு தனது திருமண நாளான ஜனவரி 27-ம் தேதி, திருச்சி அருகேயுள்ள சாந்தி ஆதரவற்றோர் காப்பகத்தில் இருந்து மனவளர்ச்சி குன்றிய ஐந்து ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுத்துள்ளார். வாழ்நாள் முழுவதும் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தரவுள்ளார்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் "மாற்றான்' படத்தின் தெலுங்கு உரிமையை பிரபல தெலுங்குத் தயாரிப்பாளர் பெல்லம் கொண்டா சுரேஷ் ரூ.17 கோடிக்கு பெற்றுள்ளார். இதன் வெளிநாட்டு உரிமை ரூ.12  கோடிக்கு விலை பேசப்பட்டுள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்குப் பிறகு ஒரு தமிழ் நடிகரின் படம் இவ்வளவு அதிகமான தொகைக்கு விற்கப்படுவது இதுவே முதல் முறை.

ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் தமிழ்ப் படங்கள் தொடர்ந்து ஹிட் ஆகி வருவதால் பாலிவுட் நடிகர்கள் தங்கள் மார்க்கெட்டைத் தக்க வைத்துக்கொள்ள தமிழ்ப் படங்களின் ரீமேக்கில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் கமல்ஹாசனின் "வேட்டையாடு விளையாடு' ரீமேக்கில் சல்மான்கான், ஏ.ஆர்.முருகதாஸின் "ரமணா' ரீமேக்கில் ஷாருக் கான், "கோ' ரீமேக்கில் அபிஷேக் பச்சன் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

அரசியல் புரோக்கராக இருக்கும் ஒரு பெண், சேர்த்து வைத்துள்ள கோடிக்கணக்கான பணத்தைக் கல்லூரி மாணவர்கள் சிலர் கொள்ளையடிப்பது போன்ற பின்னணியில் ஒரு கதையை "பத்தாயிரம் கோடி' என்ற பெயரில் படமாக இயக்கி வருகிறார் சீனிவாசன் சுந்தர். இந்தக் கதையைத் தவிர்க்கலாமே என ஆரம்பத்திலேயே அறிவுறுத்தியிருக்கிறார் அவரது தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன். தற்போது, இந்தக் கதை அரசியல் புரோக்கர் நீரா ராடியா தொடர்பானது என செய்தி பரவியுள்ளதால்  வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் பல அரசியல்வாதிகளிடமிருந்து மிரட்டல் வந்துகொண்டிருப்பதாகக் கூறுகிறார் இயக்குநர்.

திரு இயக்கத்தில் விஷால்-த்ரிஷா நடிக்கும் "சமரன்' படத்தின் மூலம் பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் தமிழில் அறிமுகமாகிறார். அவருக்கு "பவர்ஃபுல் வில்லன்' வேடம். இந்த வேடத்தில் நடிக்க வேண்டும் என அரவிந்த் சாமியை பல மாதம் தொடர்ந்து வற்புறுத்தியிருக்கிறார் இயக்குநர். ஆனால் மீண்டும் சினிமாவில் நடிக்கும் எண்ணமே இல்லை என அவர் மறுத்துவிட்டதால் மனோஜ் பாஜ்பாயிடம் கதை சொல்லி சம்மதம் பெற்றிருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகமான ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் ஜி.வி.பிரகாஷ். "உங்கள் பாடல்களைக் கேட்டு மாமா ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டுவாரா?' எனக் கேட்டபோது... ""என் மாமா கடந்த வருடத்தின் பெரும்பாலான நாள்கள் வெளிநாடுகளில் இருந்ததால் பல சமயம் அவரது பாராட்டுகளை டிவிட்டரிலும் பத்திரிகைகளிலும் பார்த்துதான் தெரிந்துகொள்வேன். எப்போதாவது அரிதாக ஃபோன் செய்து பாராட்டுவார். அவரைப் பார்த்தே மாதக்கணக்கில் ஆகிவிட்டது.

தான் நடித்த "நான் மகான் அல்ல', "மகதீரா' (தெலுங்கு), "சிங்கம்' (ஹிந்தி) படங்கள் பெரும் வெற்றியடைந்ததற்கு அந்தப் படங்களில் வெள்ளை உடையில் தேவதை போன்று தோன்றியதுதான் காரணம் என நம்புகிறார் காஜல் அகர்வால். அதனால் சூர்யாவுடன் நடித்து வரும் "மாற்றான்', விஜய்யுடன் நடிக்கும் "துப்பாக்கி' படங்களில் ஒரு காட்சியிலாவது வெள்ளை உடை காஸ்ட்யூம் வேண்டும் என வேண்டுகோள் விடுக்க அதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் இயக்குநர்கள்.

கமல்ஹாசன் கதை, திரைக்கதையில் உருவாகும் புதிய படத்தை "உன்னைப்போல் ஒருவன்' படத்தை இயக்கிய சக்ரி டெலோட்டி இயக்குகிறார். கமலுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை  கேத்ரினா கைஃப் நடிக்கக் கூடும். ஆஸ்கார் ரவிச்சந்திரன் பிரமாண்டமாகத் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் அஜித்துக்கு ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் ஒதுக்கியிருக்கிறார் கமல்.

"கற்றது தமிழ்' படத்தை இயக்கிய ராம் இயக்கும் புதிய படம் "தங்க மீன்கள்'. படத்தின் ஸ்கிரிப்டைப் பார்த்து வியந்த இயக்குநர் கெüதம் மேனன், இந்தப் படத்தைத் தானே தயாரிக்க முடிவெடுத்துள்ளார். இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பத்மப்ரியா கதாநாயகியாக நடிக்கிறார்.

நடிகைகள் தொழிலதிபர்களைத் திருமணம் செய்துகொண்டு "செட்டில்' ஆவதுதான் வழக்கம். முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வரும் ரீமா சென்னோ திருமணம் செய்துகொண்டு தொழிலதிபர் ஆகப் போகிறார். ஆம்! தில்லியில் பிரபல ஓட்டல் வைத்திருக்கும் ஷிவ் கரண் சிங்கை மார்ச் மாதம் திருமணம் செய்யவுள்ள ரீமா, அதன் பிறகு நடிப்புக்கு ஓய்வு கொடுத்துவிட்டு கணவரின் ஓட்டல் நிர்வாகத்தை ஏற்கப் போகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

SCROLL FOR NEXT