தினமணி கதிர்

அஞ்சரைப் பெட்டி

காய்கறிகளின் நிறம் மாறாமல் இருக்க வேக வைக்கும் நீரில் சிறிது உப்பைப் போட்டால் நிறம் மாறாது.   ரொட்டித் துண்டு காய்ந்துவிட்டால் சிறிதளவு சூடான பாலை அதில் தெளித்து, தோசைக் கல்லில் போட்டு வாட்டினால் ரொட்

ஆர். ஜெயலட்சுமி

காய்கறிகளின் நிறம் மாறாமல் இருக்க வேக வைக்கும் நீரில் சிறிது உப்பைப் போட்டால் நிறம் மாறாது.

ரொட்டித் துண்டு காய்ந்துவிட்டால் சிறிதளவு சூடான பாலை அதில் தெளித்து, தோசைக் கல்லில் போட்டு வாட்டினால் ரொட்டித் துண்டு புத்துணர்வு பெற்றுவிடும்.

கீரை வேகும்போது சில துளிகள் எலுமிச்சைச் சாறைவிட்டு வேக வைத்தால் கீரை பச்சைப் பசேலென்று இருக்கும்.

உடைக்காத முழுத்தேங்காயை குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் நீண்ட நாள் கெடாமலும், தேங்காயை உடைக்கும்போது அந்தத் தண்ணீர் ஜில்லென்று தித்திப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.

எண்ணெய் கத்தரிக்காய் குழம்புக்கு வதக்கும்போது ஒரு தேக்கரண்டி கட்டித் தயிரை ஊற்றிவிட்டால் கத்தரிக்காய் கருப்பாகாது.

குழம்புகளுக்கு மசால் அரைத்து விடும்பொழுது தேங்காய்த் துருவலுடன் கொஞ்சம் கசகசாவையும் சேர்த்து அரைத்துக்கொண்டால் ருசி சுவையாக இருக்கும்; வயிற்றுப் புண்ணும் குணமாகும்.

வெங்காயத் தயிர் பச்சடி செய்யும்பொழுது அரிந்த வெங்காயத்துடன் உப்புத்தூளையும் சேர்த்துப் பிசறி வைக்கவும். சிறிதுநேரம் கழித்துப் பார்த்தால் வெங்காயம் நீர்விட்டிருக்கும். அத்துடன் ஒரு பச்சை மிளகாய் மல்லித்தழை சேர்த்து நன்கு பிசைந்து தயிரில் கலந்தால் வெங்காயம் மிருதுவாகவும், பச்சடி மணமாகவும் இருக்கும்.

ரவையை உப்புப்போட்டு பிசறி வைத்து அதனுடன் உளுந்தை அரைத்துப் போட்டு தோசை வார்த்தால் ருசி ஆளைத் தூக்கும்.

வாழைத்தண்டு கூட்டு மற்றும் பொரியல் செய்யும்போது அதனுடன் சிறிது முருங்கைக் கீரையையும் சேர்த்துச் செய்தால் சுவையும் மணமும் மிகவும் நன்றாக இருக்கும்.

குளிர்சாதனப் பெட்டி வைத்திருப்பவர்கள் எலுமிச்சம்பழத்தின் தோலை அதற்குள் வைத்து மூடினால் உள்ளே துர்நாற்றம் வீசாது.

இட்லி மாவு அரைத்தபின் அது பொங்கி வழியாமல் இருக்க அதில் ஒரு வெற்றிலையைக் கிள்ளிப்போட்டு வைத்தால் பொங்கி வழியாது.

சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு போன்றவற்றை அரிசி களைந்த நீரில் வேக வைத்தால் சீக்கிரமாக வெந்துவிடும்.

வறுவல்கள் செய்யும்போது அந்தக் காய் அல்லது கிழங்கை உப்புத் தண்ணீரில் நனைத்து சிறிது நேரம் கழித்துப் பொரித்தால் சுவையாக இருக்கும்.

தேங்காயைச் சரிபாதியாக உடைக்க தண்ணீரில் நனைத்த பின்னர் உடைக்க வேண்டும்.

தோசைக்கு உளுந்து ஊற வைக்கும்போது கொஞ்சம் வெந்தயத்துடன் ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பையும் சேர்த்து ஊற வைத்து அரைத்தால் தோசை சிவப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.

சாதம் பொங்கி வரும் சமயத்தில் சில சொட்டுகள் நல்லெண்ணெயை ஊற்றி இறக்கினால் சாதம் பொலபொலவென வரும்.

இட்லி மிளகாய்ப் பொடி தயாரிக்கும்போது அதில் வேர்க்கடலையை சிறிது வறுத்துப்போட்டு சேர்த்தால் அதிக சுவையுடன் இருக்கும்.

உருளைக்கிழங்கை சீவி நல்ல நீரில் கழுவிவிட்டு உப்பு நீரில் பதினைந்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு தண்ணீரை நன்றாகப் பிழிந்துவிட்டு எண்ணெயில் போட்டு வறுத்தால் சிப்ஸ் வெண்மையாக மொறுமொறுவென்று இருக்கும்.

சாம்பார் கொதித்து இறக்கியவுடன் அதில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயையும் கறிவேப்பிலையையும் சேர்த்து மூடிவைத்தால் சாம்பார் வாசனையாக இருக்கும்.

பக்கோடா மாவுடன் சிறிதளவு நெய்யும் உப்பு சேர்த்த தயிரும் கலந்து நன்றாகப் பிசைந்து கொண்டு பக்கோடா செய்தால் பக்கோடா மொறமொறப்பாகவும் ருசியாகவும் இருக்கும்.

ரசத்திற்கு கறிவேப்பிலை போடவில்லை என்றால் மணமாக இருக்காது. கருவேப்பிலை இல்லையென்றால் ரசம் தாளிக்கும்போது கடுகு வெடித்ததும் சிறிது வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கி அதனுடன் சேர்த்து பொன்னிறமாக வறுத்து ரசத்துடன் சேர்த்தால்போதும்.

பாகற்காய் சீக்கிரம் பழுத்துவிடும். பாகற்காய்களை இரண்டிரண்டாக கீறி வைத்துவிட்டால் பழுக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

SCROLL FOR NEXT