முகப்பு
தினமணி கதிர்

புத்தர் சொன்ன குட்டிக் கதை

மிகப் பெரிய பூங்கா அது. பூக்கள் பல வண்ணங்களில் சிரித்தன. போவோர், வருவோர் எல்லாம் பூக்களை கிள்ளிச் சென்றனர். அது தோட்டக்காரனுக்கு வலித்தது. ஒரு பலகையில் பூக்களைப் பறிக்காதீர்கள் என்று எழுதி வைத்துச் செ

Updated On : 20 செப்டம்பர், 2012 at 6:59 AM
பகிர்:

மிகப் பெரிய பூங்கா அது. பூக்கள் பல வண்ணங்களில் சிரித்தன. போவோர், வருவோர் எல்லாம் பூக்களை கிள்ளிச் சென்றனர். அது தோட்டக்காரனுக்கு வலித்தது. ஒரு பலகையில் பூக்களைப் பறிக்காதீர்கள் என்று எழுதி வைத்துச் சென்றான். அன்று முதல் யாரும் பூக்களின் மீது கை வைப்பதில்லை. ஒரு நாள் காற்று கொஞ்சம் பலமாக அடித்தது. பூக்களின் சில இதழ்கள் உதிர்ந்தன. அதைப் பார்த்த தோட்டக்காரன் சொன்னான். "பாவம், காற்றுக்குப் படிக்கத் தெரியாது' ஆம். நல்ல இதயம் உள்ளவன் பூக்களுக்குத் தோழனாகவும் இருப்பான். காற்றையும் பகைத்துக் கொள்ளமாட்டான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.