தினமணி கதிர்

கிறிஸ்துமஸ் பெயர் வந்த விதம்!

கிறிஸ்துமஸ் என்ற பெயர் எப்படி வந்தது? கிரேக்க மொழியில் கிறிஸ்டோஸ் என்றால் காப்பாற்ற அவதரித்தவர் என்று அர்த்தம். இப்போது வழக்கில் இல்லாமல் இருப்பினும் ஒரு காலத்தில்

ஆர். ஜெயலட்சுமி

கிறிஸ்துமஸ் என்ற பெயர் எப்படி வந்தது? கிரேக்க மொழியில் கிறிஸ்டோஸ் என்றால் காப்பாற்ற அவதரித்தவர் என்று அர்த்தம். இப்போது வழக்கில் இல்லாமல் இருப்பினும் ஒரு காலத்தில் ஆங்கிலத்தில் "மாஸ்' என்ற வார்த்தைக்குப் பண்டிகை அல்லது "கொண்டாடுதல்' என்றும் பொருள் இருந்தது, "கிறிஸ்து' என்ற வார்த்தையைச் சுருக்கமாக கிரேக்க மொழியில் ‘ல' என்ற எழுத்தாலும் குறிப்பிட்டார்கள். ஆகவேதான் கிறிஸ்துமஸ் என்பதை ஆங்கிலத்தில் ‘ல’மஸ்' என்றும் எழுதுவது வழக்கத்தில் இருந்து வருகிறது.

கேக் செய்ய சில டிப்ஸ்கள்

பொதுவாக கேக் செய்வதற்கு மிகவும் முக்கியமானது மைதா மாவு ஆகும். மற்ற எந்த மாவையும் பயன்படுத்தக் கூடாது.

உலர்ந்த பழவகைகளை கேக்குகளுக்கோ, பிஸ்கட்களுக்கோ பயன்படுத்தும்போது அவற்றின் கொட்டை காம்புகளை நீக்கி விட வேண்டும். பருப்பு வகைகளை சேர்க்கும்போது அவற்றைச் சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

இவற்றைக் கேக்கில் சேர்ப்பதற்கு முன்பு இவற்றின் மீது சிறிது மாவை தூவி வைக்க வேண்டும். விலை உயர்ந்த கேக்குகள் தயாரிக்கும்போது இப்படிச் செய்தால் பழவகைகள் கேக்குகளின் அடியில் தங்கியிராமல் கேக் முழுவதும் பரவி இருக்கும்.

கேக் செய்வதற்கு பொடித்த சர்க்கரையைப் பயன்படுத்துவது நல்லது. பொடித்த சர்க்கரையாக இருந்தால்தான் வெண்ணெயும் சர்க்கரையும் சுலபமாகக் குழையும்.

கேக்குகளுக்கு வெல்லச் சர்க்கரையைச் சேர்த்தால் நல்ல பழுப்பு நிறத்தை அளிக்கும். கேக் பார்ப்பதற்கும் அழகாகக் காட்சியளிக்கும்.

கேக் சரியாக வர...

வெண்ணெயும் சர்க்கரையும் இலேசாகும் வரை குழைக்க வேண்டும். குழைப்பதற்கு அலுப்புப்பட்டால் கேக் சரியாக வராது.

வெண்ணெய் கலவையை நன்கு குழைத்தாலும் முட்டையை நன்கு அடித்து வெண்ணெய் கலவையில் ஊற்றிய பின்னும் மிகவும் நன்றாக அடிக்க வேண்டும். இவ்வாறு செய்யாவிட்டாலும் கேக் வராது.

குறைந்த அளவில் பேக்கிங் பவுடரைப் பயன்படுத்தினால் கேக் சரியாக அமையாது. கேக்கை குறைந்த வெப்பத்திலோ அல்லது அதிக வெப்பத்திலோ பேக் செய்திருந்தாலும் கேக் வராது.

கேக்கின் மேலே முறுகலாக இருந்தால் அதிக வெப்பத்தில் பேக் செய்திருக்க வேண்டும்.

பேக்கிங் பவுடர் அதிகமாக இருந்து அதிக சூடும் இருந்தால் கேக் மீது பள்ளம் உண்டானால் உலர்ந்த பழங்களை ஈரப்பசையுடன் பயன்டுத்தியிருக்கலாம்.

அளவுக்கு அதிகமான சர்க்கரையைப் பயன்படுத்தினால் கேக் மொர மொரப்பாகவும் ஈரமாகவும் கனமாகவும் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT