கொமலர்
ஆற்றில் படகு அமைதியாகச் சென்று கொண்டிருந்தது. கொமலாவின் இசைக் குழுவினர் அந்தப் படகில் பயணம்
ஆற்றில் படகு அமைதியாகச் சென்று கொண்டிருந்தது. கொமலாவின் இசைக் குழுவினர் அந்தப் படகில் பயணம் செய்துகொண்டிருந்தார்கள்...
"கொமலா' தான் அந்த இசைக் குழுவிலேயே சின்னவன். அந்தச் சிறுவனுக்கு எட்டு வயது இருக்கும். குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். ஆற்றில் நீர் மட்டம் வடியும்வரை அவர்கள்
ஜமீன்தார் வீட்டில் இருப்பார்கள்.
Advertisement
இப்போது ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது. ஜமீன்தார் தங்க நாணயங்கள் தருவார். அறுசுவை உணவளிப்பார். அன்று அவர்கள் ஆர்வத்துடன் பேசிக் கொண்டிருந்தார்கள்...
ஜமீன்தார் மாளிகையில் அந்த இசைக் குழுவினருக்கு நல்ல வரவேற்பு. அசைவம் சாப்பிடுபவர்களுக்குப் புலால் உணவும் சைவம் சாப்பிடுபவர்களுக்கு மரக்கறி உணவும் அளிக்கப்பட்டது. அனைவரும் வயிறாற உண்டனர்.
மதியம் சிறுவன் கொமலா - ஜமீன்தாரின் முன்னால் கொண்டுவந்து நிறுத்தப்பட்டான். அவன் உருவத்தை ஜமீன்தார் ரசித்துப் பார்த்தார். இசைக் கருவிகள் இசைக்கப்பட்டன. சிருங்காரப் பாடல்களைப் பாடினார்கள். கொமலா - பாட்டுக்கு ஏற்றபடி நடனமாடினான். நடனம் முடிந்ததும் ஜமீன்தார் முகத்தைச் சுளித்துக் கொண்டு அவன் நடனத்தைக் குறை சொன்னார்.
இரவு வந்தது!
அரச மாளிகையில் அந்தப்புரத்திற்குச் செல்லும் பெண்ணை அலங்கரிப்பது போல் - சிறுவன் கொமலாவை அலங்கரித்தார்கள். பெண் உடை அவனுக்கு சரியாகப் பொருந்தி இருந்தது.
ஜமீன்தாரிணி - தன் படுக்கை அறையில் கட்டிலில் தூக்கம் வராமல் புரண்டுகொண்டு இருந்தாள். தனக்குப் போட்டியாக வந்த அந்த கொமலாவை நினைத்து - அவள் பொறுமிக் கொண்டிருந்தாள்.
ஆற்றில் நீர் மட்டம் தாழும் வரையில் கொமலா - குழுவினர் இங்குதான் இருப்பார்கள். ஜமீன்தாரின் காமத்திற்கு சிறுவன் இரையானான்.
""அந்தச் சிறுவன் கொமலாவை இந்த மாளிகையில் இருந்து அனுப்பிவிடுங்கள். எல்லோரும் ஊர் போய்ச் சேரட்டும்..'' என்றாள் ஜமீன்தாரிணி.
""அவனை ஊருக்கு அனுப்பமாட்டேன். நீ வேண்டுமானால் உன் அம்மா வீட்டுக்குப் போ!'' என்று முகத்தைச் சுளித்தபடி சொன்னார் ஜமீன்தார்.
ஜமீன்தாரிணி, தன் எதிர்ப்பை வாபஸ் வாங்கிக் கொண்டாள். ஆனால் அவள் மனதில் ஒரு பயங்கரமான சதித் திட்டம் உருவெடுத்தது.
சிறுவன் கொமலா - பகலில் நாட்டியமாடினான். இரவில், ஜமீன்தாரின் படுக்கையை அலங்கரித்தான்.
ஜமீன்தார் - உருவ ஓவியத்திற்காகப் "போஸ்' கொடுத்துக் கொண்டிருந்தார்....
""என்ன? என்னை ஓவியமாகத் தீட்டி முடித்துவிட்டாயா?'' - என்று முகத்தைச் சுளித்தபடி கேட்டார் ஜமீன்தார்.
""இன்று முழுக்க உங்களை "ஸ்டடி' செய்தேன். இனிமேல்தான் ஓவியம் தீட்டுவேன்!'' என்றான் ஓவியன்.
ஜமீந்தார் மேலும் முகத்தைச் சுளித்துக் கொண்டார்.
சமையல் அறையில் தலைமைப் பெண் வேலைக்காரி மாயாவதி. அவளைச் சந்திக்க விரைந்தாள் ஜமீன்தாரிணி....
ஜமீன் மாளிகையைச் சுற்றி இருக்கும் மதில் சுவரின் மேல் ஏறிக்கொண்டு, எந்தவித பயமும் இன்றி சிறுவன் கொமலா நடைபோடுவதை ஜமீன்தாரிணி பார்த்து வைத்திருந்தாள்... இரவு வேளைகளில் தனக்குப் போட்டியாக வந்துவிட்ட அந்த அப்பாவிச் சிறுவனைக் கொல்ல அவள் துணிந்துவிட்டாள்.
""மாயா! அந்தக் கொமலா, மதில் மேல் நடை பழகும்போது, அவனிடம் பேச்சுக் கொடுத்து, அவனை மதில் மேலிருந்து தள்ளிவிடு!!''
மாயா திகைத்துப் போனாள்.
இந்தப் பாவ காரியத்திற்கு லஞ்சமாக ஜமீன்தாரிணி - மாயாவுக்குத் தன் தங்க வளையல்கள் இரண்டைக் கழற்றிக் கொடுத்தாள்!
மதில் மேல் நடை பழகிக் கொண்டிருந்தான் கொமலா. மரண பயம் சிறிதும் இல்லாமல். கொஞ்சம் தவறினால் கூடக் கீழே விழுந்து மண்டை சிதறிவிடுமே... என்ற பயம் சிறிதும் இல்லாமல்....
மாயாவின் இதயம் துரித கதியில் இயங்கிக் கொண்டிருந்தது. மாடியேறி மதில் சுவர் அருகில் வந்தாள். இந்தச் சமயம் பார்த்து ஓவியன் அங்கு வந்துவிட்டான்...
கொமலா - ஓவியனைப் பார்த்துச் சிரித்தான். மாயா - மறுபடியும் கீழே இறங்கிப் போய்விட்டாள்.
அடுத்த நாள் - அவள் மாடிக்குச் சென்றபோது- அங்கு யாருமில்லை! கொமலா மாத்திரம் மதில் விளிம்பில் நடை பழகிக் கொண்டிருந்தான். பேச்சுக் கொடுத்துக் கொண்டே மாயா அவனைத் தள்ளிவிட்டாள்.
சிறுவன் கீழே - ரத்த வெள்ளத்தில் கிடந்தான்.
சிறுவன் அருகே இசைக் குழுவினர் புரண்டு புரண்டு அழுதார்கள். ஜமீன்தார் அவர்களைத் தேற்றினார்.
""நடந்தது என்னமோ நடந்துவிட்டது! நீங்கள் எல்லாம் - உங்கள் ஆயுசு முழுக்கக் கவைப்படாமல் வாழ்க்கை நடத்தப் பொன் தருகிறேன்...''
ஜமீன்தார் சவரன்களை இறைத்தார். ஆற்றில் நீர் மட்டம் இன்னும் தாழவில்லை!
படத்தின் தலைப்பு: Pleasure Boy Komola (2012)
நாடு: பங்களாதேஷ்
இயக்குநர்: ஹூமாயூன் அஹமது
(பங்களாதேஷில் இருந்து ஆஸ்கர் பரிசுக்கு அனுப்பப்பட்ட படம்)