மன்னர் விருந்தில் வட்டமான கரிய பொருள்?
இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ், ஒரு சமயம் இந்தியப் பிரதிநிதிகள் சிலருக்குப் பக்கிங்காம்
இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ், ஒரு சமயம் இந்தியப் பிரதிநிதிகள் சிலருக்குப் பக்கிங்காம் அரண்மனையில் ஒரு விருந்து அளிக்க விருப்பம் கொண்டார். அதில் முக்கியமாக தென்னிந்திய உணவு வகைகளையே பரிமாற எண்ணங் கொண்டார்.
மன்னர் விருப்பத்தின் பேரில், தஞ்சாவூர் தலை வாழை இலை, கல்லிடைக்குறிச்சி அப்பளம், கேரளத்து நேந்திரம் பழம், ஆந்திரத்து ஆவக்காய் ஊறுகாய் என்று பலவும் விமானம் மூலம் லண்டனுக்கு வரவழைக்கப்பட்டன.
அரண்மனைச் சமையல் கலைஞர்களே எல்லாத் தென்னிந்திய உணவு வகைகளையும் தயாரித்தனர்.
Advertisement
உணவுகள் பரிமாறப்பட்டன. இலையில் உணவுகளுடன் வட்டமான கரிய பொருள் ஒன்றும் பரிமாறப்பட்டது. அது என்ன பொருள் என்று யாருக்கும் புரியவில்லை. இந்தியப் பிரதிநிதிகள் அது சாப்பிடக் கூடிய பொருளா? இல்லையா? என்று தெரியாமல் மலைத்தனர்.
விருந்து முடிந்த பின்புதான் அதுபற்றித் தெரிய வந்தது. அப்பளத்தைப் பத்திரமாக அனுப்ப விரும்பியவர் ஓர் அப்பளத்தை வைத்து அதற்கு மேல் ஒரு வட்டமான எண்ணெய்க் காகிதத்தையும், அதன் மீது ஓர் அப்பளம் என்ற முறையில் அடுக்கி அனுப்பியிருந்தார். அப்பளம் பொரிப்பவர் அப்பளத்தை எறிந்துவிட்டு எண்ணைய்க் காகிதத்தை பொரித்துப் பரிமாறிவிட்டார். அதுதான் அந்தக் கரிய வட்டப் பொருள்.