முகப்பு
தினமணி கதிர்

சமையல் டிப்ஸ்

குடமிளகாய் மோரில் போடும்போது வெந்தயத்தை ஊற வைத்து மிக்சியில் அரைத்து மோருடன் கலந்து

Updated On : 15 ஜூன், 2013 at 6:19 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 5:42 PM

குடமிளகாய் மோரில் போடும்போது வெந்தயத்தை ஊற வைத்து மிக்சியில் அரைத்து மோருடன் கலந்து போட்டால், மிளகாய் வறுக்கும்போது வாசனையாகவும், காரம் குறைவாகவும் இருக்கும்.

பாயாசம் செய்யும்போது திராட்சை போடுவதற்குப் பதிலாக பேரீச்சம்பழத்தை நறுக்கிப் போட்டால் வித்தியாசமாகவும், ருசியாகவும், சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.

இட்லிக்கு அரைத்த மாவில் இரண்டு கரண்டி நல்லெண்ணெய் ஊற்றிக் கலந்து வைத்தால் இட்லி பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.

Advertisement

டால்டா, நெய் கெட்டியாக இருக்கும்போது பாத்திரத்தில் இருந்து எடுப்பது கடினம். தேக்கரண்டியைச் சூடாக்கிக் கொண்டு எடுத்தால் சுலபமாக வரும்.

கெட்டியான ருசியான தயிர் வேண்டுமா? பாலை உறை ஊற்றி ஒரு தேக்கரண்டியால் கலக்கிவிட்டால் தயிர் கெட்டியாக இருக்கும்.

வடித்த சாத கஞ்சியில் சீயக்காய்தூள் சேர்த்து தலை தேய்த்துக் குளிக்க, முடி பளபளப்பாகவும், உடல் குளிர்ச்சியாகவும் இருக்கும்.

மைதாவை சலித்து அப்படியே வேட்டியில் வைத்து அதனுடன் முறுக்கிற்கு தேவையான பொருள்களைச் சேர்த்து பிசைந்து முறுக்கு செய்ய, முறுக்கு கரகரப்பாக இருக்கும்.

ஃபில்டரில் டிகாஷன் சுலபமாக இறங்க முதலில் சிறிது சர்க்கரை போட்டு காபிப்பொடி போட வேகமாக இறங்கும்.

ஊறுகாயில் வறுத்த வெந்தயப்பொடியைச் சேர்த்தால் மணமாகவும், உடல் சூட்டையும் தணிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.