"ஷெர்லாக் ஹோம்ஸ்'
ஆர்தர் கானன்டாயில் 1886-ஆம் ஆண்டு தன்னுடைய கற்பனையில் உருவாக்கிய துப்பறியும் நிபுணர் ஷெர்லாக் மற்றும் அவரது உதவியாளர்
ஆர்தர் கானன்டாயில் 1886-ஆம் ஆண்டு தன்னுடைய கற்பனையில் உருவாக்கிய துப்பறியும் நிபுணர் ஷெர்லாக் மற்றும் அவரது உதவியாளர் வாட்சனுக்கு துவக்கத்தில் முறையே, ஷெரின் போர்ட் ஹோம்ஸ் என்றும் ஆர்மாண்ட் சாக்கர் என்றும் பெயரிட்டிருந்தார். நிஜவாழ்க்கையில் துப்பறிபவராக ஹோம்ஸ் என்று பெயரிட்டிருந்தாலும் உள்ளூர் கிரிக்கெட் ஹீரோவான ஷெர்லாக் என்பவரின் பெயரும் இவருடன் ஒட்டிக்கொண்டது.
உண்மையில் கானன்டாயில் தொழில் ரீதியாக ஒரு டாக்டர். நோயாளிகளைப் பரிசோதிக்கும் நேரம் தவிர பொழுது போகாதபோது கதைகள் எழுதத் தொடங்கினார்.
1887-ஆம் ஆண்டில்தான் முதன்முதலாக "எ ஸ்டெடி இன் ஸ்கார்லெட்' என்ற நாவல் மூலம் ஷெர்லாக் ஹோம்ஸ் என்கிற கற்பனை துப்பறியும் நிபுணர் பாத்திரத்தை அறிமுகப்படுத்தினார். அப்போது இந்த நாவலுக்கு எந்தவிதமான சிறப்பும் இல்லை. இதைப் பிரசுரம் செய்ததற்காக இவருக்குக் கிடைத்த தொகை வெறும் 25 பவுண்டுதான். நிஜவாழ்க்கையில் தன்னுடைய நண்பரான டாக்டர் ஜோசப் பெல் என்பவரை வைத்து உருவகப்படுத்திய கற்பனை கதாபாத்திரம்தான் ஷெர்லாக்.
ஷெர்லாக் ஹோம்ஸ் அவரது உதவியாளர் வாட்சன் இருவரும் 221 பி, பேக்கர்ஸ் ஸ்ட்ரீட் என்ற இடத்தில் வசிப்பதாக இவர் எழுதியிருந்தார். உண்மையில் இந்த முகவரியில் "அபே நேஷனல் பில்டிங் சொசைட்டி'யின் தலைமை அலுவலகம் இயங்கி வந்தது. பிரிட்டனில் மட்டுமன்றி ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள வாசகர்கள் ஷெர்லாக் ஹோம்ஸ்ûஸ ஓர் உண்மையான உயிருடன் வாழும் துப்பறியும் நிபுணராகக் கருதி காணாமற்போன தங்கள் உடைமைகள், தங்கள் வழக்குகளில் துப்பறிந்து உண்மையைக் கண்டுபிடிக்கும்படியும் நாள்தோறும் கடிதங்கள் எழுதத் தொடங்கினார். நாள்தோறும் நூற்றுக்கணக்கில் இந்த முகவரிக்குக் கடிதங்கள் வரத் தொடங்கியதால், இவர்கள் அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் ஷெர்லாக் ஹோம்ஸின் காரியதரிசியாக வர்ணிக்கப்பட்ட அபே நேஷனல்ஸ் எரிகா ஹெப்பர் என்பவரிடமிருந்து பதில்களை அனுப்பத் தொடங்கினர்.
ஹோம்ஸிற்குப் பிடித்தமானது தேனீக்கள் வளர்ப்பது, வயலின் வாசிப்பது என்றும் "ஹிஸ் லாஸ்ட் போ' என்ற நாவலில் இவர் 1854-ஆம் ஆண்டு பிறந்ததாக எழுதப்போய் இவரது வாசகர்கள் இவரது பிறந்தநாளாக ஜனவரி 6-ஆம் தேதியை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
கற்பனைப் பாத்திரமென்றாலும் விக்டோரியா மகாராணியின் கடைசி பத்தாண்டு கால ஆட்சியின்போது லண்டன் பத்திரிகையொன்று ஷெர்லாக் ஹோம்ûஸக் கடுமையாக விமர்சித்திருந்தது. தனிப்பட்ட முறையில் தன்னுடைய படைப்புகள் காலத்தால் அழிவற்றவை என்று கூறிய கானன்டாயில், ஷெர்லாக் ஹோம்ஸ் தன்னால் மறக்க முடியாத பாத்திரம் என்று கூறி வந்தார்.
இவரது 12 சிறப்பு சிறுகதைகளைத் தொகுத்து "தி அட்வென்ச்சர் ஆஃப் ஷெர்லாக் ஹோம்ஸ்' என்ற தலைப்பில் 1891-ஆம் ஆண்டு "ஸ்டாரண்ட்' பத்திரிகை தொடர்ந்து வெளியிட்டபோதுதான் கானன்டாயிலுக்கு புகழும் மதிப்பும் கிடைக்கத் தொடங்கியது. 1891-ஆம் ஆண்டில் தன்னுடைய 24-ஆவது நாவலில் சண்டையொன்றில் ஷெர்லாக் ஹோம்ஸ் இறந்து போவதாக எழுதியதற்கு வாசகர்கள் அந்த முடிவை ஏற்க மறுத்து, ஸ்ட்ராண்ட் பத்திரிகைக்கு நூற்றுக்கணக்கான கண்டனக் கடிதங்களை எழுதினர்.
வேறு வழியின்றி வாசகர்கள் வேண்டுகோளுக்கிணங்கி 1901-ஆம் ஆண்டில் எழுதிய "தி ஹவுண்ட் ஆஃப் தி பாஸ்கர்வில்லி' என்ற நாவலில் அவர் இறப்பதற்கு முன் நடந்த சம்பவங்கள்போல் சித்திரித்து எழுதினாரே தவிர அவர் உயிருடன் இருப்பதுபோல் ஏதும் குறிப்பிடவில்லை. ஆனால் 1903-ஆம் ஆண்டு மீண்டும் "எம்ப்டி ஹவுஸ்' என்ற நாவலில் ஷெர்லாக் ஹோம்ஸ் உயிருடன் இருப்பதுபோல் எழுதிய பின்னரே வாசகர்கள் திருப்தியடைந்தனர்.
ஷெர்லாக் ஹோம்ûஸ கடைசிவரை திருமணமாகாதவராகவே உருவகப்படுத்தியிருந்தார் கானன்டாயில். ஒரு நாவலில் ஷெர்லாக்கிடம் ""தாங்கள் ஏன் இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை?'' என்று கேள்வி கேட்பது போலவும் அதற்கு அவர் ""பெண்களை எப்போதும் முழுமையாக நம்பிவிட முடியாது'' என்று பதிலளிப்பது போலவும் எழுதியிருந்தார்.
ஷெர்லாக் ஹோம்ஸ் நாவல்களுக்கு நூறாண்டுகள் ஆன போதிலும் என்றுமே "அவுட் ஆஃப் தி பிரிண்ட்' என்ற நிலை ஏற்பட்டதே இல்லை. தொடர்ந்து ஏதாவது ஒரு நாவல் மறுபதிப்பாக வந்து கொண்டேயிருக்கிறது.