முகப்பு
தினமணி கதிர்

மீண்டும் ஸ்ரீசாந்த்..!

ஸ்ரீசாந்த் என்றவுடன் ஹர்பஜன் சிங்கிடம் அடி வாங்கி அழுததும் ஊழல் புகாரில் சிக்கி கிரிக்கெட் விளையாட்டை விட்டே விலக்கப்பட்டதும்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

ஸ்ரீசாந்த் என்றவுடன் ஹர்பஜன் சிங்கிடம் அடி வாங்கி அழுததும் ஊழல் புகாரில் சிக்கி கிரிக்கெட் விளையாட்டை விட்டே விலக்கப்பட்டதும் ஞாபகத்துக்கு வந்துவிடும்.

அவருடைய பந்துவீச்சு சாதனைகளைவிட அவர் மேல் எழுந்த புகார்களும் இன்னபிற செய்திகளும் அவ்வளவு பிரபலம். அதற்கப்புறம் ஓர் அரசகுமாரியைத் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார் என்ற செய்தியும் வந்தது.

அதெல்லாம் சரி... மனிதர் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்?

அவருக்கு ஏற்கெனவே நன்றாக நடனம் ஆட வரும் என்பது தெரிந்த விஷயம்.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக நடனப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுத் தேர்ச்சியும் பெற்றிருக்கிறார்.

மும்பையிலுள்ள ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளருக்காக "ஜாலக் திக்லா ஜா' என்ற போட்டி நடன நிகழ்ச்சி (நம்மூர் "மானாட மயிலாட' போல) ஒன்றில் கலந்து கொண்டு தனது நடனத் திறமையை

நிரூபிக்கப் போகிறார். போட்டியில் வெற்றி பெற்றால்

மீண்டும் புகழ் வெளிச்சத்துக்கு வந்துவிடுவார் என்று அவருடைய நண்பர்களும் சுற்றமும் நம்புகிறார்கள்.

அவருடைய சகோதரர் திபுசாந்த் இதற்காக ஸ்ரீசாந்துக்கு மானேஜர் போல பணிபுரிந்து வருகிறார். ஸ்ரீசாந்தின் மனைவி புவனேஸ்வரி குமாரி அவருக்கு உற்ற துணையாக இருந்து நிகழ்ச்சியில் அவருக்கு உற்சாகமூட்டவிருக்கிறார்.

இந்தி நடிகர் ரண்பீர் ஷோரி இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் நடிகை மாதுரி தீட்சித், கரண் ஜோஹர் மற்றும் ரெமோ டிசூஸô ஆகியோர் நடுவர்களாகவும் இருக்கிறார்கள்.

ஸ்ரீசாந்துக்கு ஜோடியாக நடனமாட இருப்பவர் சினேகா கபூர் என்ற டான்ஸ் மாஸ்டர்.

ஆனாலும் இந்தப் போட்டி மிகவும் கடுமையானதாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.

ஏனெனில் போட்டியில் மிகவும் பிரபலமான பூரப் கோலி, சுக்விந்தர் சிங் மற்றும் úஸôபி சௌத்ரி ஆகியோரும் உள்ளனர்.

மற்றொரு ஆச்சரியமூட்டும் தகவலும் ஸ்ரீசாந்தைப் பற்றி இருக்கிறது.

விரைவிலேயே தமிழ் திரைப்படம் ஒன்றுக்கு இசையமைக்கப் போகிறார். அநேகமாக இந்தப் படத்துக்கான பாடல்களையும் அவரே எழுதக்கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.