தமிழை நேசித்த எல்லிஸ்
1796இல் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்ற வந்தவர் ஃப்ரான்சிஸ் வைட் எல்லிஸ் என்ற ஆங்கிலேயர் சென்னை வந்தார்.
1796இல் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்ற வந்தவர் ஃப்ரான்சிஸ் வைட் எல்லிஸ் என்ற ஆங்கிலேயர் சென்னை வந்தார். படிப்படியாக முன்னேறி 1810இல் மெட்ராஸ் மாகாண கவர்னர் ஆனார். தமிழ் மொழியின் மேல் காதல்கொண்டு, ராமச்சந்திரக் கவிராயர் என்பவரிடம் தமிழ் கற்றார். செய்யுள் இயற்றும் அளவுக்கு புலமை பெற்றார். திருக்குறள் மீது பற்றுக்கொண்டு, நன்கு கற்று, அறத்துப்பாலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். 1812இல் வெளியான அந்த நூல்தான் திருக்குறளின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு. சென்னையில் தண்ணீர் பஞ்சத்தைப் போக்க உறைக் கிணறுகள் வெட்டி, அதில் கவிதை வடிவில் தன் திருப்பணிகளை வெளியிட்டிருக்கிறார். திருக்குறள் படித்ததன் பயனால்தான் உறைக் கிணறுகள் வெட்டியதாகக் கூறுகிறார். "சென்னைப் பட்டினத்து எல்லிஸ்' என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். திருக்குறளின் மீதான பற்றின் காரணமாக திருவள்ளுவர் உருவம் பொறித்த, பொன்னாலான இரட்டை வராகன் நாணயத்தை வடிவமைத்தார். 1819ஆம் ஆண்டு இறந்தார். கல்லறையில் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைக் கவிதையாக எழுதியதைச் செதுக்கியுள்ளனர்.