முகப்பு
தினமணி கதிர்

பட்டுக்கோட்டையின் கடைசிப் பாடல்!

பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் இறந்தபோது, அவரது பூதவுடலைச் சுற்றித் திரையுலகப் பிரமுகர்கள் கண்ணீரும்

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:23 AM
பகிர்:

பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் இறந்தபோது, அவரது பூதவுடலைச் சுற்றித் திரையுலகப் பிரமுகர்கள் கண்ணீரும் கம்பலையுமாக நின்றிருந்தார்கள். அவர்களில் ஒருவர் நடிகை பண்டரிபாய். அவரது கையில் அந்நேரம் ஒரு தாள் இருந்தது. அந்தத் தாளில்,

 தானா எவனும்

 கெட மாட்டான்

 தடுக்கி விடாம

 விழ மாட்டான்!

 போனா எவனும்

 வர மாட்டான் - மேலே

 போனா எவனும்

 வர மாட்டான் - இதப்

 புரிஞ்சிக்கிட்டவன்

 அழ மாட்டான்

என்று எழுதப்பட்டிருந்தது. இந்தப் பாடல்தான், பட்டுக்கோட்டையார் கடைசியாக எழுதிய பாடலாகும். நடிகை பண்டரிபாய் தயாரிப்பில் உருவாக இருந்த "மகாலட்சுமி' படத்திற்காகக் கவிஞர் எழுதியிருந்த பாடல் அதுவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.